Israel Iran War :மூன்று மொழிகளில் போரை அறிவித்த அயதுல்லா அலி கமேனி!

மூன்று மொழிகளில் போரை அறிவித்த,  ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனி மிரட்டல் பதிவு உலக நாடுகளிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஈரான் – இஸ்ரேல் இடையேயான போர் உச்சத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், (யூதர்களின் தேசிய இயக்கத்துக்கு) இரக்கம் காட்ட முடியாது என ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனி எச்சரித்துள்ளார். ஸயோனிஸ்ட்டுகளின் பயங்கரவாத பிராந்தியத்துக்கு எதிராக ஈரான் பலத்துடன் இயங்கும் எனக் கூறியுள்ளார். இதே மிரட்டலை ஆங்கிலம், ஃபார்ஸியில் வெளியிட்ட ஈரானின் உச்சத் தலைவர் தற்போது, ஹீப்ரூ மொழியில் தெரிவித்துள்ளார். அடுத்தடுத்து சில மணி நேரங்களில்,  மூன்று மொழிகளில் அவர் விடுத்துள்ள எச்சரிக்கை பதிவால், உலக நாடுகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும், ஃபார்ஸி மொழியில் அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், கையில் வாளேந்திய நபர் கோட்டை வாயிலில் இருப்பது போன்ற சித்தரிப்புப் படத்தை இணைத்து, ‘போர் தொடங்கியது’ என்று குறிப்பிட்டுள்ளார். முன்னதாக, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது ட்ரூத் சமூக வலைதளத்தில், “ஈரானின் உச்சபட்ச தலைவர் என்று அழைக்கப்படுபவர் எங்கு மறைந்திருக்கிறார் என்பது தெரியும் என்றும் ஆனால் அவரைக் கொல்வது எங்கள் நோக்கம் இல்லை என்றும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஈரானின் உச்சத் தலைவர் வெளியிட்டுள்ள மிரட்டல் பதிவு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *