மகளிர் கிரிக்கெட் போட்டியில் இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதல்..!

மகளிர் உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன.

13 ஆவது மகளிர் உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி மும்பையில் நடைபெறுகிறது. இதில், இந்தியா, தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன.

இதனில், ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி லீக் சுற்றில் 4-வது இடம் பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தது. அரையிறுதியில் 7 முறை சாம்பியனான ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி அளித்து 3-வது முறையாக இறுதிப்போட்டிக்கு இந்திய அணி முன்னேறியுள்ளது.

தென்ஆப்பிரிக்க அணி லீக் சுற்றில் 3-வது இடம் பிடித்து அரையிறுதிக்குள் அடியெடுத்து வைத்தது. அரையிறுதியில் 4 முறை சாம்பியனான இங்கிலாந்தை விரட்டியடித்து முதல்முறையாக இறுதிப்போட்டியை எட்டியுள்ளது.

இந்த போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு 39 கோடி ரூபாயும் இரண்டாவது இடம் பெறும் அணிக்கு 19 கோடி ரூபாயும் வழங்கப்பட உள்ளது. இறுதிப் போட்டி என்பதால் இந்திய ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *