50 இலட்ச ரூபாயில் வீரமங்கை வேலுநாச்சியாருக்குச் சிலை..!!

Advertisements

சென்னையில் வீரமங்கை வேலுநாச்சியார் உருவச் சிலையைத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார்.

சென்னை கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் ஐம்பது இலட்ச ரூபாய் செலவில் விடுதலைப் போராட்ட வீராங்கனை இராணி வேலு நாச்சியாரின் சிலை நிறுவப்பட்டுள்ளது.

இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அந்தச் சிலையைத் திறந்து வைத்ததுடன், அதன் அடியில் வைக்கப்பட்டுள்ள வேலுநாச்சியாரின் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள், திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *