கனடா உடனான வர்த்தக பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பே இல்லை – டிரம்ப் அறிவிப்பு..!

கனடா உடனான வர்த்தக பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பே இல்லை என அமெரிக்க அதிபர் தெரிவித்துள்ளார்.

கனடாவின் புகழ்பெற்ற ஒண்டோரியா மாகாண கவர்னரான டோக் போர்டு அனுமதியுடன் சர்ச்சைக்குரிய விளம்பரம் ஒன்று அங்குள்ள தொலைக்காட்சிகளில் அரசு சார்பில் ஒலிபரப்பப்பட்டது.

அந்த விளம்பரத்தில் டிரம்புக்கு எதிரான கருத்துகள் பதிவிடப்பட்டிருந்த நிலையில் அதிபர் டிரம்புக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது.

இதுகுறித்து கனடா பிரதமர் மார்க் கார்னி டிரம்பிடம் தொலைபேசியில் உரையாடினார். அப்போது, பகிரங்கமாக மன்னிப்பு கேட்டு விளம்பர ஒலிபரப்புக்கு தடை விதிப்பதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் கனடா உடனான வர்த்தக பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பே இல்லை என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் வெள்ளை மாளிகையில் நிருபர்களிடம் பேசியபோது, கனடா தனக்கு பிடித்த நாடு என்றும் கனடா பிரதமர் மார்க் கார்னி தன்னுடைய நல்ல நண்பர் என்றும் தெரிவித்தார்.

இருப்பினும் அந்த போலியான விளம்பரம் தனக்கு கோபத்தை ஏற்படுத்திவிட்டது எனக் கூறினார். இதனால் கனடா உடன் எந்த வர்த்தகப் பேச்சுவார்த்தையில் ஈடுபட போவதில்லை என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *