ஈரானுக்கு தகுந்த பதிலடி கொடுப்போம் – வளைகுடா நாடுகள் எச்சரிக்கை.!

ஈரானின் தாக்குதல்களுக்குத் தகுந்தப் பதிலடி கொடுக்கப்படும் என்று வளைகுடா நாடுகள் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இஸ்ரேல், அமெரிக்கா ஒன்றிணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தியதில் ஈரான் உச்ச தலைவர் காமேனி உயிர்மாய்க்கப்பட்டார். இதற்கு, ஈரான் பதிலடி கொடுக்கும் விதமாக கத்தார், குவைத், பஹ்ரைன், ஐக்கிய அரபு அமீரகத்தின் மீது தாக்குதல் நடத்தியதால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் நிலவி வருகிறது.

இதுகுறித்து, வளைகுடா நாடுகள் ஈரானின் தாக்குதல்களுக்குத் தகுந்தப் பதிலடி கொடுக்கப்படும் என்று பரபரப்பு கூட்டறிக்கை வெளியிட்டுள்ளது. இதில், பதற்றத்தைத் தணிக்க மேற்கொண்ட பலகட்ட தூதரக முயற்சிகளையும் மீறி, ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.

தொடர்ந்து, எங்களின் பாதுகாப்பிற்கு எவ்வித சமரசத்திற்கும் இடமில்லை. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க ஒன்றிணைந்து செயல்பட உள்ளோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *