T20 World cup : ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி தென்ஆப்பிரிக்கா அணி.!

Advertisements

20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்று போட்டியில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி தென்ஆப்பிரிக்கா அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

டெல்லியில் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்று போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில், தென்ஆப்பிரிக்கா -ஜிம்பாப்வே அணிகள் மோதுகின்றன.

இதில், டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் செய்து 7 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து, 154 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென்ஆப்பிரிக்கா அணி 17 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் எந்த போட்டியிலும் தோல்வியடையாமல் தென்ஆப்பிரிக்கா அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது..

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *