Eloor: பிரியாணிக்குள் கோழியின் முழு தலை!

Advertisements

பிரியாணிக்குள் கோழியின் முழு தலை! ஓட்டலுக்கு சீல்…!

கேரள மாநிலம எர்ணாகுளம் மாவட்டம் ஏலூர் பகுதியை சேர்ந்தவர் பிரதிபா. சம்பவத்தன்று இவர் முத்தூரில் உள்ள பரோட்டா கடையில் 4 பிரியாணி பார்சல்கள் வாங்கியிருக்கிறார்.

Advertisements

அவற்றை குடும்பத்துடன் சாப்பிட வீட்டுக்கு எடுத்து வந்திருக்கிறார். வீட்டில் வைத்து பிரியாணி பார்சல்களை பிரித்த போது, அதில் ஒரு பார்சலில் பிரியாணிக்குள் கோழியின் முழு தலை கிடந்தது. அதனைப்பார்த்து பிரதிபா மற்றும் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.

பிரியாணிக்குள் கோழி தலை கிடந்தது குறித்து திரூர் நகராட்சியின் உணவு பாதுகாப்பு அதிகாரிகளிடம் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் சம்பந்தப்பட்ட ஓட்டலில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். பின்பு அந்த ஓட்டலுக்கு சீல் வைத்து மூடினர்.

பிரியாணிக்குள் கோழியின் முழு தலை கிடந்த விவகாரத்தில் ஓட்டலை அதிகாரிகள் மூடிய சம்பவம் மலப்புரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *