Todays Gold Rate: தங்கம் விலை மேலும் உயர்வு!

Advertisements

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக குறைந்து வந்த நிலையில், நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரேயடியாக சவரனுக்கு ரூ.960 உயர்ந்தது. இந்த நிலையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை மேலும் உயர்ந்துள்ளது.

நாட்டின் பணவீக்க உயர்விற்கு முக்கிய ஆதாரமாக கருதப்படும் தங்கத்தில் இந்திய மக்கள் அதிகளவில் முதலீடு செய்தும், பயன்படுத்தியும் வருகின்றனர்.

தங்கத்தை பாதுகாப்பான மற்றும் லாபகரமான முதலீடாகவும் சமானியர்கள் மட்டும் அல்லாமல் பங்குச்சந்தை முதலீட்டாளர்களும் இது முக்கிய முதலீடாக திகழ்கிறது.

இந்நிலையில்  சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.46,640-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.5,830-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் 24 கேரட் தங்கம் விலை ₹ 6,360 (1 கிராம்) ஆகவும் உள்ளது.

மேலும், சென்னையில் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.80.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *