நாகினி நடிகையின் சகோதரி, மைத்துனர் படுகொலை!
நாகினி நடிகை மதுரா நாயக் தனது சகோதரி, மைத்துனர் இஸ்ரேலில் கொல்லப்பட்டதாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.Madhura Naik
பிரபல நாகினி சீரியல் நடிகை மதுரா நாயக் சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார், இஸ்ரேலில் நடந்த தாக்குதலின்போது ஹமாஸ் பயங்கரவாதிகளால் அவரது உறவினர் சகோதரி ஒதயா மற்றும் மைத்துனர் அவர்களின் குழந்தைகள் கண் எதிரிலேயே கொல்லப்பட்டதாகச் சோகத்துடன் பதிவிட்டுள்ளார்.
பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியோர்களை குறிவைத்து தாக்கி வருவதாகத் தெரிவித்துள்ளார். மேலும் மனிதாபிமானத்துடன் செயல்பட வேண்டும் என்று தெரிவித்தார்.

