BANGALORE : ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டத்தில் தமிழகத்தை சேர்ந்த இளம்பெண் உயிரிழப்பு..!

2025 ஐபில் கிரிக்கெட் போட்டி இந்தியாவில் உள்ள பல நகரங்களில் கடந்த மார்ச் மாதம் தொடங்கி பல்வேறு நகரங்கரில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இறுதி கட்டத்தை நெருங்கிய நிலையில் , நேற்றைக்கு பெங்களூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களில் ஒரு தமிழக பெண்ணும் உயிரிழந்துள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் 18 ஆண்டுகால வரலாற்றில் முதன்முறையாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கோப்பையை வென்றது. இதை கொண்டாடும் வகையில், பெங்களூரூவில் வெற்றிக்கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

அப்போது பெங்களூரு அணி வீரர்களை காண கட்டுக்கடங்காத கூட்டம் நிலவியதால் அந்த தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மைதானத்திற்கு செல்ல முடியாத பலரும் மைதானத்திற்கு வெளியே திரண்டதால், அந்த கூட்ட நெரிசலில் சுமார் 11 பேர் உயிரிழந்தனர்.

இதில் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையை சேர்ந்த தேவி என்பவரும் உயிரிழந்துள்ளார்.உயிரிழந்த தேவி பெங்களூருவின் ராமமூர்த்திநகரில் வசித்து வந்து ஒரு தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வந்துள்ளார்.11 பேருக்கும் பிரேத பரிசோதனை முடிவடைந்து, அவர்களது உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது. தேவியின் உடலும் கோவைக்கு அனுப்பப்பட்டது.

பிரேத பரிசோதனை முடிந்து, உறவினர்களிடம் உயிரிழந்தவர்களின் உடல்கள் ஒப்படைக்கும்போது அவர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதது அங்கிருந்தவர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *