“வேட்டைக்காரன் மீண்டும் கிளம்பி வர்றான்…விஜய்யின் அதிரடி திட்டங்கள் என்ன ..?

Advertisements

தமிழக அரசியலில் ஏற்பட்ட மிகப்பெரிய துயர சம்பவத்திற்கு பிறகு நவபர் மாதம் முதல் வாரத்தில் வேட்டைக்காரன் விஜய் மீண்டும் கிளம்பி வருகிறார்.

தனது ஜனநாயகன் படப்பிடிப்பை முடித்துவிட்டு அரசியல் களத்தில் இறங்க போகிறேன் என்று அறிவித்த நடிகர் விஜய் யாரும் நம்பாத வகையில் நிஜமாகவே அரசியல் களத்தில் குதித்தார்.

முதற்கட்டமாக அவர் நடத்திய விக்கிரவாண்டி மாநாடு ஒட்டு மொத்த இந்திய அரசியல் பார்வையாளர்களையும் திரும்பிப் பார்க்கச் செய்தது.

இதற்கு அடுத்தப்படியாக மதுரையில் நடத்திய மாநாடும் மிகப் பிரம்மாண்டமான வெற்றியை தேடி தந்தது. முன்னதாக தனது அரசியல் கட்சிக்கு தமிழக வெற்றி கழகம் என பெயரிட்டு தேர்தல் ஆணையத்திலும் பதிவு செய்தார்.

தமிழ்நாடு முழுவதும் மின்னல் வேகத்தில் பொறுப்பாளர்களை நியமித்த கையோடு மாமல்லபுரத்தில் நிர்வாகிகள் சந்திப்பையும் நடத்தினார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் அவரது கரூர் தேர்தல் பிரச்சாரம் துயர சம்பவமாக முடிவடைந்து விட்டது.

நாமக்கல்லில் சாலையோர பேரணியை முடித்துவிட்டு விஜய் கரூர் வந்த போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் மரணத்தை தழுவும் சூழ்நிலை ஏற்பட்டது. தமிழகம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்திய இந்த நிகழ்வு அரசியலிலும் மிகப்பெரிய கலவரத்தை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் தொடர்பாக திமுக மீது குற்றம் சாட்டப்பட்டு அதற்கு விளக்கம் அளிக்கப்பட்டு வருகிறது இது தவிர சிபிஐ விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டு இருக்கிறது. நடந்த சம்பவம் குறித்து விஜய் மிகுந்த அதிர்ச்சி அடைந்தார் அந்த அதிர்ச்சியில் இருந்து அவரால் மீளவே முடியவில்லை.

இதற்கிடையே கரூர் சூழ்நிலையை பின்னணியில் வைத்துக் கொண்டு டெல்லி பாஜக மேல் இடம் அவரை கூட்டணிக்கு அழைத்துக் கொண்டிருக்கிறது. அதிமுக தரப்பிலும் கூட்டணிக்கு அழைத்து வருகிறார்கள். கூட்டணி விவகாரத்தில் யார் முதல்வர் வேட்பாளர் என்ற கருத்து வேறுபாடு இருப்பதால் விஜய் இதற்கு சம்மதிக்கவில்லை .

இது மட்டுமல்ல தனது ரசிகர்களும் கட்சித் தொண்டர்களும் பொதுமக்களும் கூட்டணி அமைப்பதை விரும்பவில்லை என்பதையும் விஜய் நன்றாக புரிந்து வைத்திருக்கிறார். அதிமுகவுடன் கூட்டணி வைத்தாலும் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி வகித்தாலும் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி தான் அறிவிக்கப்படுவார் என்ற சூழ்நிலை இருப்பதால் விஜய் ஆதரவு தெரிவிக்க விரும்பவில்லை.

அவரைப் பொறுத்த வரையில் வெற்றியாக இருந்தாலும் சரி தோல்வியாக இருந்தாலும் சரி இந்த தேர்தலில் தனித்துப் போட்டியிட வேண்டும். ஒருவேளை வெற்றி கிடைக்க விட்டாலும் தனக்கு மக்கள் மத்தியில் என்ன செல்வாக்கு இருக்கிறது என்கிற பலத்தை அறிந்து கொள்ளலாம் இதன் மூலம் அடுத்த தேர்தலில் மீண்டும் தனித்து போட்டியிடுவதா? அல்லது கூட்டணி அமைப்பதா என்பதை முடிவு செய்து கொள்ளலாம் என்ற ஆலோசனையில் தான் அவர் இருக்கிறார்.

இந்த நிலையில் கடந்த வாரம் டெல்லி பாஜக மேல் இடத்தில் இருந்து விஜய்க்கு மிகப்பெரிய மிரட்டலே விடப்பட்டதாக தெரிகிறது. நீங்கள் பாஜக கூட்டணியில் இணையாவிட்டால் ஏராளமான சிக்கல்களை சந்திக்க கூடும். ஏற்கனவே உங்கள் மீது வருமான வரி தொடர்பாக வழக்கு நிலுவையில் இருக்கிறது இது தவிர தற்பொழுது கரூர் சம்பவமும் உங்களுக்கு பாதகமாக இருக்கிறது.

எனவே பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொண்டால் ஏற்கனவே இருக்கும் சிக்கல்களில் இருந்து மீண்டு விடலாம் இது தவிர மத்திய அரசு சார்பில் உங்கள் மீது வேறு எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது நீங்கள் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி சேராவிட்டால் கட்சி நடத்துவது அவ்வளவு சுலபமல்ல என்றெல்லாம் மிரட்டி இருக்கிறார்கள்.

இது மட்டுமல்லாமல் கரூர் சம்பவம் தொடர்பாக ஏற்கனவே புசி ஆனந்த் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில் விஜய் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்படலாம் என்ற சூழ்நிலை திரைமறைவில் ஏற்பட்டிருக்கிறது . இருந்தபோதிலும் விஜய் மீது வழக்கு பதிவு செய்வதால் பிரச்சனைகள் ஏற்படலாம் என தயக்கம் காட்டப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இது தவிர கரூர் சம்பவத்திற்கு பிறகு விஜய்க்கு ஆலோசனை சொல்லும் ஐந்து பேர் கொண்ட குழுவிலும் மிகப்பெரிய முரண்பாடுகள் ஏற்பட்டன. புசி ஆனந்த் ஆதவ் அர்ஜுனா ஜான் ஆரோக்கியசாமி நிர்மல் குமார் ஆகியோர் ஒருவருக்கொருவர் மோதி வந்த நிலையில் நடிகர் விஜய் மிகவும் அப்செட் ஆகி போனார்.

தற்பொழுது அவர் ஓரளவு மனநிலையில் தெளிவடைந்திருக்கிறார். பாஜக மிரட்டல்களுக்கு அஞ்சப்போவதில்லை என்பதுடன் மீண்டும் தனது தேர்தல் பணியை தொடங்க இருக்கிறார். முதல் கட்டமாக சாலை பேரணியை நடத்த வேண்டாம் ஒவ்வொரு தொகுதிகளும் பொதுக்கூட்டம் மட்டும் நடத்தினால் போதும் என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்.

இது தவிர கரூர் சம்பவத்தில் மரணமடைந்த 41 பேர் குடும்பத்தினருடனும் ஏற்கனவே தொலைபேசியில் பேசி தனது வருத்தத்தை தெரிவித்து இருக்கிறார். அவர்கள் அனைவருமே உங்கள் மீது தவறில்லை உங்களை நாங்கள் நேசிக்கிறோம் எங்கள் வாக்கு உங்களுக்கு தான் என்று ஒட்டுமொத்தமாக கருத்து தெரிவித்திருக்கும் நிலையில் தான் மாமல்லபுரத்தில் அவர்களை சந்திப்பதற்கான ஏற்பாடுகள் தொடங்கப்பட்டன.

நவம்பர் முதல் வாரத்தில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜயின் தேர்தல் பணிகள் மீண்டும் வேகமாக தொடங்கப்பட இருக்கின்றன. இடைப்பட்ட காலத்தில் தனது கட்சிக்குரிய தேர்தல் சின்னத்தை நடிகர் விஜய் முடிவு செய்துவிட்டார் தற்பொழுது இளைஞர்கள் மற்றும் பெண்களை கவரும் வகையில் ஐந்து சின்னங்களை அவர் தேர்வு செய்திருக்கிறார்.  தேர்தல் கமிஷனை பொருத்தவரையில் ஐந்து சின்னங்களை தேர்வு செய்தால் அதில் ஏதாவது ஒரு சின்னத்தை ஒதுக்கி தருவார்கள்.

இது தொடர்பாக தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் வருகிற நவம்பர் மாதம் 5ஆம் தேதி தேர்தல் ஆணையத்தில் மனு செய்ய இருக்கிறார்கள் அனேகமாக தமிழக வெற்றி கழகத்திற்கு ஆட்டோ சின்னம் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. ஏற்கனவே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மூலம் ஆட்டோக்காரர்கள் தமிழ்நாடு முழுவதும் பிரபலமானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது விஜய் தேர்ந்து எடுத்திருக்கும் ஆட்டோ சின்னம் தமிழகம் முழுவதும் ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்களை மகிழ்விக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே மதுரை மண்டலத்தில் 10 தொகுதிகள் தமிழக வெற்றி கழகத்திற்கு சாதகமாக இருப்பதாக முதல் ஆய்வு அறிக்கை விஜய் இடம் தரப்பட்டு இருக்கிறது. இது அவருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மதுரையில் நடைபெற்ற மாநாட்டுக்கு பிறகு தமிழக வெற்றி கழகம் அங்கு கூடுதல் செல்வாக்கை பெற்றிருப்பதாகவும் தகவல் சொல்லப்பட்டு இருக்கிறது.

இதற்கிடையே தனது ஆலோசகர்கள் ஜான் ஆரோக்கியசாமி புசியானந்த் ஆதவ் அர் ஜுனா நிர்மல் குமார் ஆகிய அனைவரையும் அழைத்து சமாதானம் பேசியிருக்கிறார். ஒவ்வொருவரும் தனித்தனி துறைகளை மேற்பார்வை செய்ய வேண்டும் ஒருவர் துறையில் இன்னொருவர் தலையிடக்கூடாது என்கிற ரீதியில் பேசி முடிவெடுத்திருக்கிறார்.

வருகிற நவம்பர் மாதம் 15 ஆம் தேதிக்கு பிறகு அவர் மீண்டும் தனது தேர்தல் பிரச்சார பயணத்தை தொடங்குகிறார் ஆனால் இந்த முறை ஒவ்வொரு பகுதிகளிலும் பொதுக்கூட்டம் மூலமாக பொதுமக்களை சந்திக்க இருக்கிறார் என்பது ஜெம் தொலைக்காட்சி வழங்கும் சிறப்பு செய்தி ஆகும்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *