
சட்டசபை நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் அ.தி.மு.க. உறுப்பினர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை:சட்டசபை தொடங்கியதுமே இன்றும் அ.தி.மு.க. உறுப்பினர்கள் கேள்வி நேரத்தை ஒத்திவைத்துக் கள்ளக்குறிச்சி விவகாரத்தை விவாதிக்க கோரி அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து சபாநாயகர் உத்தரவை அடுத்து அவை காவலர்கள் அ.தி.மு.க. உறுப்பினர்களை அவையிலிருந்து வெளியேற்றினர்.
இதையடுத்து பேசிய சபாநாயகர் அப்பாவு,
* ஒத்திவைப்பு தீர்மானம் கொடுத்தாலும் அ.தி.மு.க.வினர் பேசத் தயாராக இல்லை.
* சட்டசபையில் அமர்ந்து பேச அ.தி.மு.க.வினருக்கு விருப்பமில்லை.
* சட்டசபை மரபு மற்றும் விதிப்படி அ.தி.மு.க.வினர் நடந்து கொள்ளவில்லை.
* அவை நடவடிக்கையில் கலந்து கொள்ள கூடாது என்ற நோக்கத்தில் அ.தி.மு.க. உறுப்பினர்கள் செயல்படுகின்றனர்.
* சட்டசபை நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் அ.தி.மு.க. உறுப்பினர் சஸ்பெண்ட் செய்யப்படுகிறார்கள் என்றார்
இதனிடையே, அவை முன்னவர் துரைமுருகன் கூறுகையில், கள்ளக்குறிச்சியை பற்றித் தைரியமாகச் சபையில் பேசி இருக்க வேண்டும். எதிர்க்கட்சி தலைவர் மலிவான விளம்பரத்தைத் தேடுகிறாரெனக் கூறினார்.


