பழனிசாமிக்குச் சரியான பாடம் புகட்டுவோம்; ஓ. பன்னீர் செல்வம்

Advertisements

வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமிக்குச் சரியான பாடம் புகட்டுவோம் என்று முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

சென்னை, புரசைவாக்கத்தில் அதிமுக தொண்டர் உரிமை மீட்புக் குழு ஆலோசனைக் கூட்டம், முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் தலைமையில் நடைபெற்றது. இந்தக், கூட்டத்தில், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவில் இணைய போவதில்லை என தீர்மானம் நிறைவேறப்பட்டது. அப்போது, ஓ. பன்னீர் செல்வம் பேசியப் போது, எடப்பாடி பழனிசாமி இல்லாத அதிமுகவில் ஒன்றிணைவோம் என்ற வைத்திலிங்கம் கருத்தை வழிமொழிகிறேன். தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணியில் இருப்பதே வெட்கக்கேடு என்றும், அவருக்கு வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் சரியான பாடம் புகட்டுவோம் என்றும் தெரிவித்தார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *