விண்ணில் பாய்கிறது புளூ பேர்ட் செயற்கைக்கோள்..!

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் எல்.வி.எம்3-எம்6 ராக்கெட் வாயிலாக புளூ பேர்ட் செயற்கைக்கோள் விண்ணில் இன்று நிலைநிறுத்தப்பட உள்ளது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மைய ஏவுதளத்தில் இருந்து இன்று காலை எல்.வி.எம்3-எம் 6 ராக்கெட் வாயிலாக புளூ பேர்ட் செயற்கைக்கோள் விண்ணில் நிலைநிறுத்தப்பட உள்ளது. இந்த புளூ பேர்ட் செயற்கைக்கோளை அமெரிக்காவைச் சேர்ந்த தனியார் நிறுவனம், தகவல் தொடர்பு சேவைக்காக 6,500 கிலோ எடையில் உருவாக்கி உள்ளது. இதனால், தொலைதூர கிராமங்களுக்கு மொபைல் போன், அதிவேக இணையதள சேவைகளை வழங்க உதவுகிறது. இதையடுத்து, ராக்கெட்டிற்கு தேவையான எரிபொருள் நிரப்பும் பணி நிறைவடைந்து, ஏவுதளத்தில் தயார் நிலையில் உள்ளது. மேலும், ராக்கெட் மற்றும் செயற்கைக்கோளின் செயல்பாடுகளை விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *