
மக்கள் ஆதரவாக இருக்கும்போது, எந்த பாசிச சக்திகளாலும் தமிழ்நாட்டை ஒன்றும் செய்ய முடியாது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை, பெரம்பூரில் உள்ள தனியார் பள்ளியில் திமுக சிறுபான்மை நல உரிமைப் பிரிவு சார்பில், கிறிஸ்துமஸ் பெருவிழா நடைபெற்றது. இந்த, விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு கேக் வெட்டி நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர், அவர் பேசியப் போது, மக்கள் ஆதரவாக இருக்கும்போது, எந்த பாசிச சக்திகளாலும் தமிழ்நாட்டை ஒன்றும் செய்ய முடியாது. தொடர்ந்து, உங்களுக்குத் துணையாக திமுகவும் – மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியும் உறுதியாக இருக்கும். இதேபோல், என்றைக்கும் நீங்கள் எங்களுக்கு துணையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.




