
சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதற்கு, மத்திய ஜல் சக்தி அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் கண்டனம் தெரிவித்துள்ளார்…
பாரதிய ஜனதா கட்சியின் பரிவர்தன் சங்கல்ப் யாத்திரையின் ஒரு பகுதியாக, ராஜஸ்தானின் பார்மரில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் மத்திய அமைச்சர் பங்கேற்றார்.
அப்போது பேசிய அவர், சனாதனத்திற்கு எதிராகப் பேசுபவர் எவரும் நாட்டில் அரசியல் அதிகாரம், அந்தஸ்தை தக்கவைக்க முடியாது. சனாதனத்தை ஒழிப்பதாக கூறுவதைஅ பொறுத்துக்கொள்ள முடியாது. முன்னோர்கள் தங்களது உயிரைப் பணைய வைத்துச் சனாதனத்தை காப்பாற்றினர். அதனை ஒழிக்க வேண்டும் எனச் சிலர் பேசி வருகின்றனர்.
சனாதனத்தை எதிர்த்தால் நாக்கை பிடுங்குவோம், கண்ணை நோண்டுவோம்” எனப் பேசியுள்ளார். சனாதனம் தொடர்பாக உதயநிதி ஸ்டாலினுக்கு உரிய பதிலடி கொடுக்கப் பிரதமர் மோடி அறிவுறுத்தியதாகக் கூறப்படும் நிலையில், மத்திய அமைச்சர் மிரட்டல் தொனியில் இவ்வாறு பேசியுள்ளார்.
As G20 is over & Point 78 of declaration has no relevance the Honourable Minister of @narendramodi cabinet advocates violence
So now it is going to be an “Open Season” https://t.co/QYdZq7NZWB— Asaduddin Owaisi (@asadowaisi) September 11, 2023

