தேசியக் கல்விக் கொள்கையை எதிர்த்து விவாதித்த பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ்..!

Advertisements

கோவையில் மாணவர்களுக்கான மாதிரிப் பாராளுமன்றத் திட்டத்தில் பங்கேற்ற பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ், தேசியக் கல்விக் கொள்கையை எதிர்த்து விவாதித்தார்.

கோவை உப்பிலிப்பாளையத்தில் பள்ளி மாணவர்களுக்கான மாதிரிப் பாராளுமன்றத்தில் விவாதம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அமைச்சர் அன்பில் மகேஷ், தேசியக் கல்விக் கொள்கையை ஆதரித்து மத்திய அமைச்சர்கள் தர்மேந்திர பிரதான், நிர்மலா ஆகியோர் பேசுவர் என்றும், அதை எதிர்த்துத் தமிழச்சி, திருச்சி சிவா, கனிமொழி  ஆகியோர் பேசுவர் என்றும் தெரிவித்தார்.

மாணவர்கள் வீட்டில் இருந்து பொழுதைக் கழிப்பதைத் தவிர்த்து இதுபோன்ற விவாத நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவதோடு நாட்டு நடப்பையும் தெரிந்துகொள்ள வேண்டும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *