
ரேடியோ ஜாக்கியாகத் தனது பயணத்தைத் தொடங்கி விஜய் டிவி பக்கம் வந்து பிரபலமான தொகுப்பாளினியாக வலம் வந்தவர் பாவனா.
முதல்முதலில் ராஜ் டிவியில் பீச் கேர்ள்ஸ் என்ற நிகழ்ச்சியைத் தான் தொகுத்து வழங்கியுள்ளார். விஜய்யில் சூப்பர் சிங்கர் ஜுனியர், சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடன நிகழ்ச்சி தொகுத்து வழங்கி மிகவும் பிரபலம் ஆனார்.
அப்படியே ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் சேனலில் ஐபிஎல், உலகக் கோப்பை டி20, நியூசிலாந்துக்கு எதிரான தொடர், கால்பந்து, கபடி, கைப்பந்து போன்ற பல நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார்.
கணவர்பற்றிப் பிரபலம்
சமீபத்தில் தொகுப்பாளினி பாவனா தனது கணவர்குறித்து பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். அதில் அவர், எங்களுக்குத் திருமணம் நடந்து 10 வருடம் ஆகிவிட்டது, வெளியே எங்கேயாவது செல்ல வேண்டும் என்றால் நேரம் கிடைப்பதில்லை.
அப்படியே போக வேண்டும் என்றாலும் அடுத்த மாதம் என்ன பண்ண போறீங்க என முன்னாடியே கேட்பார், அவர் எல்லாவற்றையும் குறித்து வைத்துக் கொள்வார். நாங்கள் சந்திக்கும் நாளுக்காக அவர் எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்துவிட்டு காத்துக் கொண்டிருப்பார்.
எனக்குத் திடீரெனப் பெரிய வேலை வரும், அதை ஒதுக்கி வைக்கவும் முடியாது, ஆனால் அவர் அதைப் புரிந்துகொண்டு இயல்பாக நடப்பார். அவர் என்மீது பொசசிவ் தான், இருந்தாலும் ரொம்ப பொசசிவ் எல்லாம் கிடையாது.
காதல் வாழ்க்கைக்கு பொசசிவ் ரொம்ப முக்கியம் தான், ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு வாழ்வது ஒரு தனி சுகம் என்று கூறியிருக்கிறார்.

