தமிழகத்தில் இன்றும் நாளையும் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு

Advertisements

தமிழகத்தில் இன்றும் நாளையும் ஓரிரு இடங்களில் இலேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தெற்குக் கடலோர ஆந்திரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டலக் கீழடுக்குச் சுழற்சி நிலவுவதாகக் குறிப்பிட்டுள்ளது. தென்னிந்தியப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி நிலவுவதாகவும் குறிப்பிட்டுள்ளது.

இதனால் தமிழகத்திலும், புதுச்சேரி காரைக்கால் பகுதிகளிலும் அடுத்த ஐந்து நாட்களுக்கு ஓரிரு இடங்களில் இலேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *