Gaza : வறுமையிலும் பட்டினியிலும் வாடும் காசா மக்கள் !

Advertisements

காசாவில் ஏற்பட்டு வரும் உணவு தட்டுபாடு காரணமாக 5 ருபாய் மதிப்புள்ள பிஸ்கட் பாக்கெட் ,2400 ரூபாயாக விற்க்கப்படுவதாக  மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இரண்டாடிற்கு மேலாக காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. காசாவில் நடைபெற்று வரும் தொடர் தாக்குதல் காரணமாக பலர் உறவுகளை இழந்துள்ளனர். மேலும் காசாவில் அத்தியாவசிய பொருட்களுக்கான உணவு, மற்றும் குடிநீருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. காசாவில் சர்வதேச நாடுகள் உதவி செய்ய முன்வந்த நிலையில் அதனை இஸ்ரேல் தடுத்துள்ளது.. இந்நிலையில் கடந்த இரு வாரங்களாக தடை நீக்கப்பட்டுள்ள இஸ்ரேல் அறிவித்தது. இதையடுத்து காசாவைச் சேர்ந்த  முகமது ஜாவத் என்பவர் தனது  குழந்தைக்கு பிடித்தமான பிஸ்கட்டை வாங்கி கொடுத்துள்ளார். 5 ருபாய் மதிப்புள்ள அந்த பிஸ்கட் தற்போது போர் காரணமாக ,2400 ரூபாயாக உயர்ந்துள்ளதாக குழந்தையின் தந்தை கூறியுள்ளார். காசாவில் உள்ள மக்கள் தொடர் தாக்குதலுக்கு உள்ளாவதால்  வறுமையிலும் பட்டினியிலும் வாடி வருகின்றனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *