பொருளாதாரத்தில் வலிமையுடன் விளங்கினால் வல்லரசு ஆகலாம்!

Advertisements

வல்லரசு நாடுகள் நிதிநிலையிலும் பொருளாதாரத்திலும் வலிமையுடன் விளங்குவதாக மத்தியச் சாலைப் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் விஸ்வேஸ்வரையா தேசியத் தொழில்நுட்ப மையத்தில் அவர் உரையாற்றினார். அப்போது, நம் நாட்டின் ஏற்றுமதியும், பொருளாதார வளர்ச்சியும் அதிகரித்தால் யாரிடமும் எதற்காகவும் சென்று கையேந்த வேண்டிய நிலை இருக்காது எனத் தெரிவித்தார்.

வல்லாதிக்கம் செலுத்தும் நாடுகள் நிதி நிலையிலும் தொழில்நுட்பத்திலும் வலிமையாக இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

உலகின் அனைத்துச் சிக்கல்களுக்கும் அறிவியல், தொழில்நுட்பம், அறிவு ஆகியவற்றால் தீர்வுகாண முடியும் என்று குறிப்பிட்ட அவர், இந்த மூன்றுமிருந்தால் உலகின் எந்த நாட்டுக்கும் தலைவணங்க வேண்டியிருக்காது என்று தெரிவித்தார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *