மோடியின் மிகப்பெரிய ரசிகன் நான் – அமெரிக்க அதிபர் டிரம்ப் புகழாரம்!

அமெரிக்காவுக்கும், இந்தியாவுக்கும் இடையிலான உறவு இதுவரை இல்லாத அளவுக்கு நெருக்கமாக உள்ளது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

டெல்லி பாரத் மண்டபத்தில் அமெரிக்க சுதந்திரத்தின் 250-வது ஆண்டு விழாவை முன்னிட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தொலைபேசி வாயிலாக பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்திய பிரதமர் மோடி சிறந்த தலைவர் என்றும் தான் மோடியின் மிகப் பெரிய ரசிகன் என்றும் கூறினார்.
அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவு இதுவரை இல்லாத அளவுக்கு நெருக்கமாக உள்ளது என்றும் இந்தியா என்னையும் எங்கள் நாட்டையும் 100 சதவீதம் நம்பலாம் என்றும் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், அமெரிக்க வெளியுறவு மந்திரி மார்கோ ரூபியோ, இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் செர்கியோ கோர் ஆகியோர் பங்கற்றது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *