Advertisements

தில்லியில் பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில், நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று கூடுகிறது.
தில்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று முதல் தொடங்கி, வருகின்ற 13ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தொடரில் வெளிநாட்டு பங்களிப்பு, வருமான வரி, உச்ச நீதிமன்றம், பிறப்பு மற்றும் இறப்புகள், தேசிய கவுரவத்துக்கு அவமதிப்பு தடுப்பு, மேகதாது, சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் அபிவிருத்தி உள்ளிட்ட மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
மேலும், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை சுமுகமாக நடத்த அனைத்து கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒத்துழைக்க வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
Advertisements




