
பங்குனி உத்திரத்தை முன்னிட்டு கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்ப-சுவாமிக்கு பம்பையாற்றில் ஆறாட்டு வைபவம் வெகுவிமரிசையாக நடைபெற்றது.கேரளா மாநிலத்தில் பிரசித்திபெற்ற சபரிமலை ஐயப்பன் திருக்கோவிலில், பங்குனி உத்திர திருவிழா கடந்த 2-ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழாவை யொட்டி, கடந்த ஒன்றாம் தேதி சபரிமலையில் திருநடை திறக்கபட்டு, சுவாமி ஐயப்பனுக்கு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
அதன்பின்னர், ஆலய தந்திரி கண்டரு-ராஜீவரரூ தலைமையில், ஆலய மேல்சாந்தி அருண்நம்பூதிரி மற்றும் அர்ச்சகர்கள் பங்கேற்று, வாத்திய கோஷங்கள் முழங்க, சுவாமி ஜயப்பனை பம்பையாற்றிற்கு எடுத்துச் சென்றனர். அங்கு சபரி மலை ஐயப்பசுவாமிக்கு, ஆறாட்டு வைபவம் சிறப்பாக நடைபெற்றது. அதன் பின்னர் உற்சவமூரத்தி அலங்கரிக்கப்பட்டு, யானை மீது பவணி வந்து. மீண்டும் கோவிலை வந்தடைந்தார்.
வரும் 18-ஆம் தேதிவரை சபரிமலை ஐயப்பன் திருக்கோவிலில், பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கபடவுள்ளனர். சபரிமலை ஐயப்பசாமியின் பங்குனி உத்தர ஆறாட்டு வைபவத்தை காண்பதற்கு, பம்பையாற்றின் கரையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, ஐயப்பசுவாமியை வழிபட்டனர்.
