பட்டாசு வெடிக்க விதித்துள்ள நேரக் கட்டுப்பாட்டை அமல்படுத்த நடவடிக்கை.!

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, பட்டாசு வெடிக்க தமிழக அரசு விதித்துள்ள நேரக் கட்டுப்பாட்டை அமல்படுத்தும் வகையில், தமிழகம் முழுவதும் காவல்துறையினர் தயாராக உள்ளனர்.

தீபாவளி பண்டிகையொட்டி, உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, பட்டாசு வெடிக்க தமிழக அரசு இரண்டு மணி நேரம் விதித்துள்ளது. இதில், காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் பட்டாசுகளை வெடிக்கலாம் என அறிவித்தது.

இந்நிலையில், அரசு விதித்துள்ள விதிமுறையை மீறி பட்டாசுகளை வெடிப்பவா்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு முழு அளவில் தயாராக இருக்கும்படி காவல்துறையினருக்கு உயா் அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

இதில், மாநிலம் முழுவதும் அனைத்து காவல் நிலையங்களிலும் தனிப்படைகள் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், காவல்துறையினர் ரோந்து மற்றும் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுவாா்கள்.

மேலும், நீதிமன்ற உத்தரவையும், அரசு உத்தரவையும் மீறி பட்டாசு வெடிப்பவா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்படும் என தமிழக காவல் துறையைச் சோ்ந்த உயா் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *