ஸ்டாலினை தோற்கடித்த திமுக முன்னாள் நிர்வாகி.. யார் இந்த வி.எஸ்.பாபு.?

Advertisements

233 தொகுதிகளில் போட்டியிட்ட தமிழக வெற்றிக் கழகம் 107  இடங்களில் முன்னிலை பெற்று வருகிறது. எடப்பாடி தொகுதியில் தவெக வேட்பாளருக்கு விஜய் ஆதரவு தெரிவித்திருந்தார். திமுக 73 இடங்களில் முன்னிலை பெற்று வருகிறது. அதிமுக 55  இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.சென்னையில் உள்ள தொகுதிகளில் காலை முதலே தவெக ஆதிக்கம் செலுத்திவரும் சூழலில், குறிப்பாக கொளத்தூர், சேப்பாக்கம், பெரம்பூர் ஆகிய தொகுதிகள் அதிகமாக கவனிக்கப்பட்டன.

21 சுற்று வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், 9,192 வாக்குகள் வித்தியாசத்தில் தவெக வேட்பாளர் வி.எஸ். பாபுவிடம் மு.க.ஸ்டாலின் தோல்வி அடைந்துள்ளார். மு.க.ஸ்டாலினை தோற்கடித்த வி.எஸ்.பாபு யார்? – ஒரு காலத்தில் திமுகவின் போர்படை தளபதியாக இருந்தவர் தான் வி.எஸ்.பாபு. வட சென்னை மாவட்ட செயலாளரான இவர், 2006-ம் ஆண்டு புரசைவாக்கம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ ஆனார்.

2011-ம் ஆண்டு புரசைவாக்கத்திலிருந்து கொளத்தூர் தொகுதி உருவானபோது, மு.க.ஸ்டாலின் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார். அந்த வெற்றியில் பெரும் பங்காற்றியவர் வி.எஸ்.பாபு.2,000 வாக்குகள் வித்தியாசத்தில் சைதை துரைசாமியை தோற்கடித்து வெற்றி பெற்றார் மு.க.ஸ்டாலின். இந்த சொற்ப வாக்கு வித்தியாச வெற்றியால் வி.எஸ்.பாபு மீது மு.க.ஸ்டாலின் அதிருப்தியில் இருந்ததாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக வி.எஸ்.பாபு திமுகவிலிருந்து ஓரங்கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் அதிமுகவிலிருந்து வந்த சேகர் பாபுவின் கட்டுப்பாட்டுக்கு சென்றது வட சென்னை. இதனால் அதிருப்தியில் இருந்த வி.எஸ்.பாபு, அதிமுகவில் இணைந்தார். ஆனால், அங்கும், வி.எஸ்.பாபுவுக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை என தெரிகிறது. தேர்தலுக்கு சில நாட்களே இருந்த நிலையில், விஜயை சந்தித்து தவெகவில் இணைந்தார் வி.எஸ்.பாபு. அவருக்கு கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு வழங்கப்பட்டது.

தற்போது மு.க.ஸ்டாலினை 9,192 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார் திமுகவின் முன்னாள் நிர்வாகியான வி.எஸ்.பாபு.கடந்த ஏப்ரல் 30-ம் தேதி தவெகவின் வேட்பாளர்களுடன் விஜய் நீலாங்கரை வீட்டில் ஆலோசனை நடத்தினார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *