
தமிழக அரசியல் வரலாற்றில் இன்று (மே 4, 2026) ஒரு மிக முக்கியமான நாளாகப் பார்க்கப்படுகிறது. 50 ஆண்டுகால திராவிடக் கட்சிகளின் ஆதிக்கத்தை ஒரு புதிய சக்தி அசைத்து பார்த்து கொண்டிருக்கிறது என்றே சொல்லலாம்..மேலும் , கேரளம் , புதுச்சேரி , தமிழ்நாடு , மேற்கு வங்காளாம் , அஸ்ஸாம் ஆகிய 5 மாநிலங்களுக்கும் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது இந்நிலையில் ,தமிழ்நாட்டில் திராவிட கட்சிகளை விட தவெக 100 இடங்களுக்கு மேலாக வென்று முன்னிலையில் உள்ளது… புதிதாக வந்த கட்சிக்கு மக்கள் அவர்களுடைய முழு ஆதரவையும் கொடுத்திருக்கின்றனர்.. இதன் மூலம் , திமுக மீது மக்கள் உள்ள அதிருப்தியையும் வெளிப்படுவதை காணமுடிகிறது ..
அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்ற ஆளுமைகளுக்குப் பிறகு ஒரு பெரும் அரசியல் வெற்றிடத்தை நோக்கித் தமிழகம் நகர்ந்தபோது, அந்த இடத்தைப் பூர்த்தி செய்யப் போவது யார் என்ற கேள்வி எழுந்தது… தற்போது அந்த இடத்தை “தமிழக வெற்றிக் கழகம்” மூலம் நடிகர் விஜய் பிடிப்பார் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது. சமீபத்திய தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளும், அரசியல் நகர்வுகளும் தமிழகத்தின் பாரம்பரிய அதிகார மையங்களை ஆட்டம் காணச் செய்துள்ளன. இது ஒரு புதிய கட்சிக்கு மிகப்பெரிய சாதனையாகக் கருதப்படுகிறது.
இந்நிலையில் , வாக்கு எண்ணிக்கை காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆரம்பத்தில் தபால் வாக்குகளில் சில இடங்களில் தவெக பின்னடைவைச் சந்தித்தாலும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) திறக்கப்பட்ட பிறகு தமிழக வெற்றி கழகம் பல தொகுதிகளில் முன்னிலை பெற்று வருகிறது. அதாவது , சமீபத்திய தகவல்களின்படி, 234 தொகுதிகளில் சுமார் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் விஜய் தலைமையிலான TVK முன்னிலை வகிக்கிறது.
ஆளும் கட்சியான திமுக, தனது கோட்டைகளாகக் கருதப்பட்ட பல இடங்களில் கடும் போட்டியை எதிர்கொள்கிறது. முதல்வர் ஸ்டாலின் உட்பட பல மூத்த அமைச்சர்கள் ஒரு சில சுற்றுகளில் பின்னடைவைச் சந்தித்து வருவது அக்கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக கூட்டணி பல இடங்களில் இரண்டாவது இடத்தைப் பிடிக்கப் போராடுகிறது. விஜய்யின் வருகை அதிமுக-வின் வாக்கு வங்கியில் பெரிய ஓட்டையைப் போட்டுள்ளதாகத் தெரிகிறது.
ஆனால் , தனித்துப் போட்டியிட்ட விஜய், தற்போது பெற்று வரும் முன்னிலை நிலவரங்கள் நீடித்தால் அவர் ஆட்சி அமைக்கத் தேவையான 118 இடங்களை நெருங்க வாய்ப்புள்ளது. ஒருவேளை இழுபறி நிலை ஏற்பட்டால், விஜய்யின் ஆதரவு இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது என்ற “கிங் மேக்கர்” நிலைக்கு அவர் உயர்வார்.. “மாற்றம்” என்ற ஒற்றைச் சொல்லை முன்வைத்து களமிறங்கிய விஜய்க்கு மக்கள் அங்கீகாரம் அளித்துள்ளதாகவே இந்தத் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. மேலும் , தமிழக அரசியலில் “மாற்றம்” என்பது எப்போதுமே திரையுலக பிம்பங்கள் மூலமாகவே நிகழ்ந்துள்ளது.
எம்.ஜி.ஆருக்குப் பிறகு அந்த மகுடம் இப்போது விஜய்க்குப் பொருந்தும் சூழல் உருவாகியுள்ளது. 2026-ல் விஜய் நினைத்தது நடந்தால், அது ஐம்பது ஆண்டு காலத் திராவிட அரசியலின் போக்கை முற்றிலுமாக மாற்றியமைக்கும். தனது ரசிகர்களைத் தொண்டர்களாக மாற்றிய விஜய், இப்போது அவர்களை ஒரு பெரும் மக்கள் சக்தியாக மாற்றியுள்ளார்.மேலும் , திராவிட அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா அல்லது திமுக/அதிமுக மீண்டும் எழுச்சி பெறுமா என்பது இன்னும் சில மணி நேரங்களில் தெரிந்துவிடும்.


