தமிழக வெற்றிக்கழக ஆட்சியில் வாழ்வது, ஒரு மோசமான திகில் திரைப்படத்தில் வாழ்வதைப் போல இருக்கிறது என்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சமூக வலைதளத்தில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி செய்தி வெளியிட்டுள்ளார். அதில், தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள சோத்துப்பாறை அணையிலிருந்து முறையான அரசு உத்தரவு அல்லது அதிகாரிகளின் அனுமதி இன்றி தவெக நிர்வாகிகள் சிலர் கால்வாய் மதகைத் திறந்து தண்ணீரை வெளியேற்றியுள்ளனர்.
ன்னர், வெளியேறிய நீரில் மலர் தூவி வரவேற்றதோடு, அதனை ரீல்ஸ் வீடியோவாகப் பதிவு செய்து, சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர் என்றும், த.வெ.க. உறுப்பினர் அட்டை இருந்தால் எந்த விதிமுறைகளையும் மதிக்க தேவையில்லை என்று நினைத்துவிட்டார்கள் என்றும், தவெக ஆட்சியில் வாழ்வது ஒரு மோசமான திகில் திரைப்படத்தில் வாழ்வதைப் போல இருக்கிறது.
அடுத்த நிமிடம் என்ன நடக்குமோ, யார் என்ன செய்வார்களோ என்ற பதற்றத்திலேயே மக்கள் இருக்க வேண்டியிருக்கிறது என்றும் தி.மு.க.நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.


