ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ஆண்டுக்கு ரூ.15,000.. சந்திரபாபு நாயுடு அதிரடி..!

மகளிர் இலவச பேருந்து திட்டத்தால் வருமான இழந்துள்ள  ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ஆண்டுதோறும் ரூபாய் 15 ஆயிரம் வழங்கும் திட்டத்தை ஆச்திர முதலமைச்சர் சந்திரபாபுநாயுடு, செயல்படுத்தியுள்ளார்.

ஆந்திராவில் பெண்களுக்கான இலவச பேருந்து பயண திட்டத்தால் வருமான இழப்பை சந்தித்து வரும் ஆட்டோ மற்றும் டாக்சி ஓட்டுநர்களுக்கு, ஆண்டுக்கு ரூபாய் 15 ஆயிரம் நிதியுதவி வழங்கும் திட்டத்தை மாநில அரசு செயல்படுத்தியுள்ளது.

இதற்காக முதற்கட்டமாக ரூபாய் 2-லட்சத்து 31-ஆயிரத்து  13 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆந்திராவில் தெலுங்கு தேசம், பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.

அம்மாநில முதலமைச்சரான தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபுநாயுடு, ஆட்டோ மற்றும் டாக்சி ஓட்டுநர்களுக்கு, ஆண்டுக்கு ரூபாய் 15 ஆயிரம் நிதியுதவி வழங்கும் திட்டத்தை செயல்படுத்தியுள்ளார்.

இதன் மூலம், சொந்தமாக ஆட்டோ, மோட்டார் கேப் மற்றும் மேக்ஸி கேப் ஆகியவற்றை வைத்து வேலை செய்து வரும் தகுதியுள்ள ஓட்டுநர்களுக்கு ஆண்டுதோறும் தலா ரூபாய் 15 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படும் என சந்திரபாபுநாயுடு தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *