Advertisements

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் இலவச மனைப் பட்டா கேட்டு நாட்டுப்புற இசைக்கலைஞர்கள் மேளதாளத்துடன் சென்று கோட்டாட்சியரிடம் மனு கொடுத்தனர்.
விருத்தாசலம் கோட்டத்துக்கு உட்பட்ட நாட்டுப்புறக் கலைஞர்கள் பலர் ஒரே வீட்டில் மகன் மருமகள் ஆகியோருடன் கூட்டுக் குடும்பமாக உள்ளனர். இதனால் தங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த இசைக்கலைஞர்களுக்கான இலவச மனைப்பட்டா வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி மேளதாளத்துடன் இசை வாத்தியத்துடன் மாவட்டத் தலைவர் மாய முனுசாமி தலைமையில் கோட்டாட்சியர் அலுவலகத்தில் சென்று மனு கொடுத்தனர்.
Advertisements



