சீருடை அணிந்த சிங்கங்கள்..!

உலகச் சாரணர் இயக்கத்தின் தந்தை பேடன் பவல் பிறந்தநாளையொட்டித் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் உலக நூற்றாண்டுச் சிந்தனை நாள் பேரணி நடைபெற்றது.
சாரணர் இயக்கம் 1907ஆம் ஆண்டு இங்கிலாந்தில் தொடங்கப்பட்டு, உலகம் முழுவதும் இளைஞர்களுக்கு ஒழுக்கம், தன்னம்பிக்கை, சமூகப் பொறுப்பு, நாட்டுப்பற்று ஆகிய பண்புகளை வளர்க்கும் நோக்கில் செயல்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் பிப்ரவரி 22ஆம் தேதி “உலகச் சிந்தனை நாளாகக் கடைப்பிடிக்கப்பட்டு, உலகச் சகோதரத்துவம், தொண்டு மனப்பான்மை ஆகியவற்றை வலியுறுத்தும் நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் தாராபுரத்தில் நடைபெற்ற பேரணியில் 23 பள்ளிகளின் 260 சாரணர்களும் 230 சாரணியர்களும் சீருடைகளுடன் பங்கேற்றனர். நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் தொடங்கிய பேரணி அரசு உயர்நிலைப்பள்ளியில் நிறைவுற்றது. வழியெங்கும் பொதுமக்கள் வரவேற்பு அளித்தனர்.
இதில் தாராபுரம் மாவட்டச் சாரணச் செயலரும் சின்னக்காம்பாளையம், தலைமை ஆசிரியருமான பெரியசாமி, காவல்துணைக் கண்காணிப்பாளர் சிவக்குமார், விவேகம் பள்ளித் தாளாளர் சுப்பிரமணியன், அருள் செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *