அம்பேத்கர் விவகாரத்தில் கொந்தளித்த பா.ரஞ்சித்!

சென்னை:

அமித்ஷா பேசுவதற்கு யார் உரிமை தந்தது? அந்த உரிமையை வாங்கிக் கொடுத்ததே அம்பேத்கர்தானென இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் அம்பேத்கர் குறித்து அமித்ஷா பேசியதற்கு கண்டனங்கள் எழுந்த நிலையில் பா.ரஞ்சித்தும் கண்டித்துள்ளார்.

அம்பேத்கர் குறித்து அமித்ஷா பேசிய பேச்சு தொடர்பாகப் பா.ரஞ்சித்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் பதிலளிக்கையில், அமித்ஷா பேசுவதற்கு யார் உரிமை தந்தது? அந்த உரிமையை வாங்கிக் கொடுத்ததே அம்பேத்கர்தான்.

இந்த நிலையில் அமித்ஷாவுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தனது கண்டனத்தில் கூறியது, எதெற்கெடுத்தாலும் அம்பேத்கர். அம்பேத்கர்… என்று சொல்கிறார்கள்” என ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவதூறாகப் பேசியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறோம். எப்படி எங்கே செல்லலாமென டூரிஸ்ட் கைடு வேலை பார்ப்பதற்கு பதிலாக, உள்துறை அமைச்சர் பொறுப்பை அமித்ஷா முதலில் சரிவரக் கவனிக்கட்டும்.

அண்ணல் அம்பேத்கர் தந்த அரசியலமைப்பு சட்டத்தை எப்படியாவது சிதைக்கலாம் என்று கங்கணம் கட்டி அலையும் பாசிஸ்ட்டுகளுக்கு, அம்பேத்கரின் பெயரைக் கேட்டாலே எரிச்சல் வருகிறது என்றால், இன்னும் பல நூறுமுறை அண்ணலின் பெயரைக் குரல் உயர்த்திச் சொல்வோம்! வாழ்க அம்பேத்கர்! அம்பேத்கர் புகழ் ஓங்கட்டும்! எனக் காட்டமாகப் பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *