வாக்காளர் சிறப்பு தீவிரத் திருத்ததிற்கு த.வெ.க தலைவர் விஜய் கண்டனம்.!

வாக்காளர் சிறப்பு தீவிரத் திருத்ததிற்கு தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் வாக்காளர் சிறப்பு தீவிரத் திருத்தம் குறித்து கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார். இதில், பீகார் மாநிலத்தில் வாக்காளர் சிறப்புத் தீவிரத் திருத்தம் குறித்த அறிவிப்பு வெளியானபோதே, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அதைக் கடுமையாக எதிர்த்ததாகத் தெரிவித்தார்.

இந்தச் சிறப்புத் தீவிரத் திருத்தத்தின் மூலம் மதச் சிறுபான்மையினர் உள்ளிட்ட சில குறிப்பிட்ட வாக்குகள் குறிவைத்து நீக்கப்பட்டிருப்பதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டியுள்ளனர்.

தமிழ்நாட்டில் மொத்தம் 6 கோடியே 36 லட்சம் வாக்காளர்கள் இருக்கின்ற நிலையில் அனைவரின் பெயரையும் வெறும் 30 நாட்களில் எப்படிச் சரிபார்க்க முடியும்? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

சிறப்புத் தீவிரத் திருத்தம் குறித்து மக்களுக்குத் தெளிவாக விளக்குவதற்காக, தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக விழிப்புணர்வுக் கருத்தரங்கம் மற்றும் தமிழகம் முழுவதும் முகாம்கள் நடத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

மக்கள் நலன், ஜனநாயகம் மற்றும் உரிமைகள் சார்ந்த அனைத்திலும் மக்கள் பக்கம் மட்டுமே தமிழக வெற்றிக் கழகம் உறுதியாக நிற்கும் என்று தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *