மேற்கு வங்க தேர்தல் களம்.. மம்தாவின் கையே ஒங்குகிறது..!

Advertisements

மேற்கு வங்கத்தை மம்தா தொடர்ந்து மூன்று முறையாக ஆட்சி செய்து வருக்கிறார். அவரது ஆட்சியை எப்படியாவது அகற்ற வேண்டும் கங்கணத்தோடு 2021 சட்டமன்றத் தேர்தலில் பாஜக பெரும் முயற்சி எடுத்தது. கடைசியில் மண்ணைதான் கவ்வியது, அதுபோல இந்த முறை விடக்கூடாது என்று வரித்துக்கட்டி களத்தில் இறங்கியுள்ளது பாஜக.

மேற்கு வங்கத்தில் ஏப்ரல் 23 மற்றும் 29 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெறபோகிறது. இப்போது ஆட்சியிலிருக்கும் திரிணாமூல் காங்கிரஸ், மற்றும் பாஜக இடையேதான் போட்டியாக நிலவுக்கிறது. . இவர்களுக்கு இடையிலான போட்டியில் இடதுசாரிகளும் காங்கிரசும் ஓரங்கட்டப்பட்டு இருக்கிறது..

.திரிணாமூல் காங்கிரஸின் கூட்டாளியான பாரதிய கோர்க்கா பிரஜா தந்திரிக் மோர்ச்சா, டார்ஜிலிங்கின் மூன்று மலைப்பகுதித் தொகுதிகளில் போட்டியிடுகிறது. மூன்று முறை ஆட்சியில் இருக்கும் திரிணாமூல் காங்கிரஸ், ஆளும் கட்சிக்கு எதிரான மனநிலையைத் திசைதிருப்பவும், புதிய முகங்களைக் களத்திற்குக் கொண்டு வரவும்,  தற்போதைய சட்டமன்றத்தின் 74 எம்.எல.ஏக்களுக்கு சீட்டு மறுத்துள்ளது.. .

2021- சட்டமன்றத் தேர்தலில், திரிணாமுல் காங்கிரஸ் 48.02 வாக்குப் சதவிகிதத்துடன் 215 தொகுதிகளை வென்றது. அதே நேரத்தில், பாஜக 38 வாக்குப் சதவிகிதத்துடன் 77 இடங்களைப் பெற்றது. இது 2016- சட்டமன்றத் தேர்லில் வெறும் மூன்று இடங்களையும் 10.2 வாக்கு சதவிகிதத்தை மட்டுமே பெற்றிருந்தது…

முதல்வரும் திரிணாமுல் காங்கிரசின் தலைவருமான மம்தா பானர்ஜி , பவானிபூர் தொகுதியில் பாஜகவைச் சேர்ந்த எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரியை எதிர்த்துப் போட்டியிடுகிறார் . இப்போது அவர் அத்தொகுதியின்  எம்.எல.ஏவாக இருக்கிறார்ர். 2021-ல், நந்திகிராம் தொகுதியில்  அவரிடம் 1,956 வாக்குகள் வித்தியாசத்தில் மம்தா தோற்றார். .அப்படியிருந்தாலும், திரும்பவும் திரிணாமுல் காங்கிரசே ஆட்சியமைத்தது..

இப்போது நடைபெறயிருக்க 2026- சட்டமன்றத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளில் , வாக்காளர் பட்டியலின் சிறப்புத் தீவிர மறுஆய்வு சர்ச்சைகளால் பாதிக்கப்பட்டுள்ளன . பிப்ரவரி 28 தேதி வெளியிடப்பட்ட மேற்கு வங்கத்தின் இறுதி வாக்காளர் பட்டியலில், 62 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்களின் நீக்கப்பட்டதால், வாக்காளர் எண்ணிக்கை 7 கோடியே 66 லட்சத்திலிருந்து  7 கோடியே 4 ஆயிரமாக குறைந்துபோனது.

அப்படியிருந்தாலும் முதல் கட்ட வாக்கு பதிவுக்கான பிரச்சாரம் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், மேலும் 60 லட்சம் வாக்காளர்கள் தீர்மானிக்க முடியாத நிலையில் இருப்பதால், முன்னெப்போதும் இல்லாத நிச்சயமற்ற நிலை மேற்கு வங்கத்தில் உருவாகி இருக்கிறது.

இதற்கு முன்பு மேற்கு வங்கத்தில் சிறப்பு வருமான அறிக்கை மீதான முரண்பாடு பற்றிய விவாதங்கள் அதிகமாக நடைபெற்று வந்தது., இப்போது அது முற்றிலும் மறைத்துவிட்டது. மேற்கு வங்கத்தில் தொடாந்து  முன்று முறையாக திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியில் இருப்பதால் இவற்றெக்கலாம், அதற்கு பொறுப்பேற்க வேண்டிய நிலையில் உள்ளன. அப்படி அதுயிருந்தாலும்  மம்தா பானர்ஜிக்கு அதுவே ஒரு வரப்பிரசாதமாக அமைந்து விட்டது.

.மேற்கு வங்கத்திற்கும் அதன் வாக்காளர்களுக்கும் விரோதமான கட்சி பாஜக என்று தனது குற்றச்சாட்டுகளைப் பெரிதாக்கி அதை  பயன்படுத்தி கொள்கிறார்.. 2024-ல் கொல்கத்தாவில் ஒரு பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம், மம்தா அரசின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை உலுக்கியதால், பாஜக 2026-ஐ தனக்குச் சாதகமான கொள்ள முயற்சிக்கிறது.

ஆனால், நாட்டின் கலாச்சார மற்றும் மொழிப் பன்முகத்தன்மையுடன் இணங்கிப் போவதில் கட்சியின் வரம்புகளும், மறுப்புகளும்கூட மாநிலத்தில் தெளிவாகத் தெரிகின்றன. மேலும் தனது நம்பிக்கையை சுருக்கிய வாக்காளர் பட்டியல் மற்றும் தேர்தல் சூழ்ச்சி மீது வைத்துள்ளது. இது மாநிலத்தை பிளவுப்படுத்தும் நிலைக்கு கொண்டு போகலாம்.,

அதேசமயம் மம்தா மற்றும் அவரது மருமகன் அபிஷேக் ஆகியோர் உறுதியான தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் தன்னை மேலும் பலப்படுத்திக் கொண்டதாகத் தெரிகிறது. பாஜகவின் வளர்ச்சிப் பாதை ஒருவேளை அதன் உச்சத்தை எட்டியிருக்கலாம். காங்கிரஸ் எந்தக் கூட்டணியும் இல்லாமல் போட்டியிடுகிறது. இடதுசாரிகள் சக்திவாய்ந்த போட்டியாளர் அல்ல,

ஆனால் தேர்ந்தெடுக்கப்பட்ட சில தொகுதிகளில் அவர்களின் வாக்கு சதவீதம், கடும் போட்டி நிலவும் இந்தத் தேர்தலில் வெற்றி வித்தியாசத்தைப் பாதிக்கக்கூடும். பாஜக மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளுமே தங்கள் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ளப் போராடுவதால், நீண்ட தேர்தல் பிரச்சாரக் காலத்தில் மேற்கு வங்கத்தில் அது சில ஆச்சரியங்களை உண்டாக்கலாம்..

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *