இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

Advertisements

இஸ்ரோ சார்பில் கடந்த டிசம்பர் 30ம் தேதி அன்று ஸ்பேடேக்ஸ் ஏ, ஸ்பேடெக்ஸ் பி ஆகிய 2 செயற்கைக்கோள்களும் பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட் மூலம் ஏவப்பட்டு விண்ணில் நிலைநிறுத்தப்பட்டன.

இதைதொடர்ந்து, விண்வெளியில் 2 யெற்கைக்கோள்களை இணைக்கும் வகையில், இஸ்ரோ செயல்படுத்தி வந்த ‘ஸ்பேடெக்ஸ்’ திட்டம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணில் 2 செயற்கைக் கோள்களை டாக்கிங் முறையில் இணைக்கும் முயற்சியில் இஸ்ரோ வெற்றி கண்டுள்ளது.

2 செயற்கைக்கோள்களை இணைக்கும் ஒருங்கிணைப்பு தொழில்நுட்பத்தை அறிந்த 4 நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.

ஸ்பேடெக்ஸ் திட்டத்தின் வெற்றிக்கு உழைத்த விஞ்ஞானிகளுக்குப் புதிய இஸ்ரோ தலைவர் நாராயணன் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், விண்ணில் செயற்கைக்கோள்களை இணைக்கும் பணியை வெற்றிகரமாக நிரூபித்த இஸ்ரோ விஞ்ஞானிகளுக்குப் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பது,

செயற்கைக்கோள்களை விண்வெளியில் இணைக்கும் பணியை வெற்றிகரமாக நிரூபித்ததற்காக இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கும், ஒட்டுமொத்த விண்வெளி சகோதரத்துவத்திற்கும் வாழ்த்துக்கள்.

இது வரும் ஆண்டுகளில் இந்தியாவின் லட்சிய விண்வெளி பயணங்களுக்கு ஒரு குறிப்பிடத் தக்க படியாகும்.

 

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *