பிரான்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி கர்ஜனை..! இந்தியாவின் ‘டிஜிட்டல்’ அசுர வளர்ச்சி..!

Advertisements

புதிய கண்டுபிடிப்புகள் கண்டுபிடிப்பது என்பது இந்தியாவின் மரபணுவிலேயே இருக்கிறது என்று, பிரான்சில் பாரத் இன்னோவேட்ஸ்-2026 என்ற கண்டுபிடி மற்றும் புத்தொழில் மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் நரேநதிரமோடி தெரிவித்துள்ளார். கடந்த 2014-ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்று, பிரதமர் நரேந்திரமோடி பிரதமர் ஆனார். 3-வது முறையாக பதவியில் நீடித்து வருகிறார். அவரது அரசு 12 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.

இந்த 12 ஆண்டு காலத்தில், அவர் பல்வேறு உலகநாடுகளுக்கு சென்று வந்துள்ளார். சமீபத்தில் ஐக்கிய அரபு குடியரசு, ஹாலந்து, சுவீடன், நார்வே, இத்தாலி ஆகிய நாடுகளுக்கு சென்று வந்தார். இந்நிலையில், பிரான்ஸ் சென்றடைந்த பிரதமர் நரேந்திரமோடியை, அந்நாட்டுப் பிரதமர் இமானுவேல் மேக்ரான் ஆரத்தழுவி வரவேற்றார். அதனைத் தொடர்ந்து, பாரத் இன்னொவேட்ஸ் என்ற தலைப்பில் நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பேசினார்.

அப்போது, இந்தியாவின் பாதுகாப்புத் துறையும், புத்தாக்கத்திற்காகத் திறக்கப்பட்டுள்ளது. இன்று, பாதுகாப்பு மற்றும் விண்வெளி தொடர்பான நூற்றுக்கணக்கான புத்தொழில் நிறுவனங்கள், இந்தியாவில் அற்புதமான பணிகளைச் செய்து வருகின்றன என்றும், சமீபத்தில், இந்தியாவின் அணுசக்தித் துறையிலும் முக்கிய சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார்.

மேலும், இந்தியாவின் மரபணு, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, இந்தியா தனது அறிவாலும், புத்தாக்கத்தாலும், உலகிற்குப் புதிய திசையைக் காட்டியுள்ளது எனவும், கணிதம் முதல் வானியல் வரை, மருத்துவம் முதல் யோகா வரை, இந்தியாவின் பங்களிப்பே ஒட்டுமொத்த மனிதகுலத்தின் முன்னேற்றத்திற்கும் அடித்தளமாக அமைந்துள்ளது என்றும், இந்தப் பாரம்பரியத்திற்கு நாம் ஒரு புதிய வேகத்தையும், புதிய திசையையும் அளித்துள்ளோம் என்றும், புதிய கண்டுபிடிப்புகள் கண்டுபிடிப்பது என்பது இந்தியாவின் மரபணுவிலேயே இருக்கிறது என்றும் பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *