ஒடிசா கடற்கரையில் அழகிய மணல் ஓவியத்தை வரைந்த சுதர்சன்பட்நாயக்..!

ஒடிசா கடற்கரையில், மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி வெற்றியடைய வாழ்த்துத் தெரிவித்து அழகிய மணல் ஓவியத்தை ஓவியர் சுதர்சன்பட்நாயக் வரைந்தார்.

13 ஆவது மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா, தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. இந்நிலையில், இந்தியா இறுதிப் போட்டியில் வெற்றிப் பெற அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இதில், ஒடிசா மாநிலம், பூரிக் கடற்கரையில், மணல் ஓவியர் சுதர்சன் பட்நாக், இந்தய அணி வெற்றியடைய வாழ்த்துத் தெரிவித்து, அழகிய மணல் ஓவியத்தை வரைந்தார்.

இந்த ஓவியத்தில், இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பீரித் கவுரின் புகைப்படமும், உலகக் கோப்பையும் இருந்தது. மேலும், இதனை, பொதுமக்கள் அனைவரும் கண்டு ரசித்து, இந்தியா அணி வெற்றிப் பெற பிராத்தித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *