Advertisements

மேகதாது அணை விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை பாதுகாக்க முதல்வர் உரிய நடவடிக்கை எடுப்பார் என்று அமைச்சர் வினோத் தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீனத்தை தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் வினோத் சந்தித்து ஆசி பெற்றார். பின்னர் ஆதீனகர்த்தருடன் கலந்துரையாடினார். அப்போது, கும்பகோண மகாமக விழாவை சிறப்பாக நடத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மயிலாடுதுறை மாவட்டத்தில் வேளாண் கல்லூரி அமைக்க அனுமதி வழங்க வேண்டும் என்றும் தருமபுரம் ஆதீனகர்த்தர் கோரிக்கை விடுத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் வினோத், மயிலாடுதுறையில் வேளாண் கல்லூரி அமைப்பது குறித்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்றார். மேகதாது அணை விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை பாதுகாக்க முதல்வர் உரிய நடவடிக்கை எடுப்பார் என்றும், உர விலை குறைப்பு தொடர்பாக மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் என்றும் கூறினார்.
Advertisements


