துரைமுருகனுக்கு ஆப்பு வைத்த ஸ்டாலின்.? செயல்  தலைவராகும் கனிமொழி..!

Advertisements

 வரலாறு காணாத வகையில் கலைஞர் ஆண்ட திராவிடத்தில் சில திருப்புமுனைகளும், திடுக்கிடும் தகவல்களும் 2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்குப் பிறகு திமுகவில் பெரிய அளவிலான மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. அது என்ன மாற்றம்  என்பதை ஜெம் தொலைக்காட்சி வாயிலாகப் பார்க்கலாம்

அப்படி வந்துகொண்டிருக்கின்ற அந்த தகவல் அரசியல் வட்டாரங்களில் தொடர்ந்து பேசப்பட்டு வருகின்றன. குறிப்பாக  தமிழகத்திலே மிக மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் திமுக அமைச்சரும், தற்போது தீய சக்தி திமுகவின்  பொதுச்செயலாளர் துரைமுருகன் மாற்றப்படுவாரா? என்ற கேள்வி திமுக அறிவாலயர்கள் மத்தியில் மடைதிறந்த வெள்ளம்போல்  ஓடிக் கொண்டிருக்கிறது.

இது ஒரு பக்கம் ஒடி கொண்டிருக்கையில் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழிக்கு புதிய பொறுப்பு வழங்கப்படுமா? என்ற கேள்வியும் கட்சிக்குள்ளே எழுந்திருக்கிறது.மாவட்டச் செயலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? என்ற கேள்விகள் கட்சிக்குள்ளும் வெளியிலும் அதிமுகமாக கேட்கப்படுகின்றனர். இந்த புதிருக்கான  விடை விரைவில் கிடைக்கும் என்கின்றனர் திமுகவினர்.சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக எதிர்பாராத தோல்வினா தோல்வி படுதோல்வியை சந்தித்ததைத் தொடர்ந்து, தோல்விக்கான காரணங்களை ஆராய 36 பேர் கொண்ட கள ஆய்வுக் குழுவை தீயசக்தி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அமைத்திருந்தார். அந்தக் குழுக்கள் தமிழகம், முழுவதும் கொடைக்கானல் ’சுற்றுலா செல்வதுபோல் சென்று சுற்றுப்பயணம் செய்து கட்சி நிர்வாகிகள்  மக்கள் மழையில் குளித்து மகிழ்வது போல மக்களிடம்  திமுக தோல்வியுற்ற  கருத்துகளை சேகரித்தன.

அதேபோல், பொதுமக்கள் மற்றும் கட்சியினரின் கருத்துகளை பெறுவதற்காக இணையதளம் மூலமாகவும் கருத்துக்கள் பெறப்பட்டன. தற்போது அந்த அறிக்கைகள் மற்றும் கருத்துகள் அனைத்தும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கைக்கு தாவியிறுப்பதாக சொல்லப்படுகிறது.

திமுக இதையடுத்து கட்சி அமைப்பில் பல்வேறு மாற்றங்கள் வரலாம் என்ற தகவல்கள் பரவத் தொடங்கியுள்ளன. மாற்றம் ஒன்றே மாறாதது என்பார்கள் அதுபோல இப்போது நடந்திருக்கும் தோல்விக்கு இனி வரும் காலங்களில்  மாற்றம் கிடைக்குமா என்று கட்சிக்குள்ளே சந்தேகம் எழத் தொடங்கிருக்கிறது.

குறிப்பாக மூத்த தலைவர் திமுக  பொதுச்செயலாளர் துரைமுருகனை மாற்றிவிட்டு புதிய நபரை நியமிக்கலாம் என்ற பேச்சு அதிகமாக பேசப்படுகிறது. திமுகவைப் பொறுத்தவரை தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர், முதன்மைச் செயலாளர் மற்றும் துணைப் பொதுச்செயலாளர்கள் ஆகியோரே கட்சியின் உயர்மட்ட நிர்வாகமாக கருதப்படுகின்றனர். இதில் தலைவர், பொதுச்செயலாளர் மற்றும் பொருளாளர் பதவிகளை பொதுக்குழுவே தேர்வு செய்கிறது.

இந்த நிலையில், தற்போதைய பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு பதிலாக புதிய நபரை நியமிக்கப் போவதாக தகவல்கள் கசிந்திருக்கிறது.  சில வட்டாரங்களில் தவெகவை சமீபத்தில் விளாசியடுத்தவரும், நாடளுமன்ற உறுப்பினருமான ஆண்டிமுத்து ராசாவின் பெயரும் பேசப்பட்டது. ஆனால் இதுகுறித்து திமுக தலைமைக்கு நெருக்கமான வட்டாரங்களில் விசாரிக்கும்போது,  உடனடி மாற்றம் ஏற்படும் வாய்ப்பு குறைவாகவே இருப்பதாக கூறப்படுகிறது.

காரணம், துரைமுருகன் இன்னும் கட்சி பணிகளில்  இந்த  இளம் வயதில் ஒடற பாம்பை மிதிக்கிற வயசு என்பார்களே அதுபோல இவர் உடல் முதிர்ந்தாலும் இன்னும் திமுகவில் பாம்பை மிதிப்பதற்கு வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறார் என்றே சொல்லாம்.இப்படி தீவிரமாக செயல்பட்டு வரும் இவர்  சமீபத்தில்கூட வழக்கம்போல் அறிவாலயத்திற்கு வந்து தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசியதுடன், கட்சி நிர்வாகிகளையும் சந்தித்து கலந்துரையாடிவிட்டு அனைவரிடமும் தன் தலையை காட்டிவிட்டுதான் சென்றிருக்கிறார்.

அவரது உடல்நிலை குறித்து சில தகவல்கள் வெளியான நிலையில், தன்னைப் பற்றிய சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அவர் கட்சி அலுவலகத்திற்கு வந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், துரைமுருகன் போன்ற மூத்த தலைவர்களைப் பற்றிய முடிவுகளை மு.க.ஸ்டாலின் அவசரமாக எடுப்பதில்லை என்றும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆக பொதுச்செயலாளர் மாற்றம் தொடர்பான தகவல்களை உறுதிப்படுத்த முடியாது என கூறப்படுகிறது.

இதேபோல், கனிமொழிக்கு செயல் தலைவர் பதவி வழங்கப்படலாம் என்ற தகவலும் காற்றில் பறந்து வரும் புழுதியைப்போல் கடந்த சில நாட்களாக பரவி வருகிறது.ஆனால் இந்த தகவலுக்கு கட்சியின் மூத்த தலைவர்கள் பலர் முக்கியத்துவம் கொடுக்கவில்லை முட்டுக்கட்டையும் போடவில்லை.. காரணம், செயல் தலைவர் என்ற பதவி திமுகவில் ஒரு குறிப்பிட்ட அரசியல் சூழ்நிலையில் மட்டுமே உருவாக்கப்பட்டது.
முத்தமிழறிஞர் கலைஞரும், மக்களால் ஊழல்வாதி என்ற முத்திரை குத்தப்பட்ட  கருணாநிதியின் உடல்நிலை மிக மோசமைடைந்திருந்த காலகட்டத்தில், கட்சியின் நிர்வாக நடவடிக்கைகள் தடையின்றி நடைபெற வேண்டும் என்பதற்காக மு.க.ஸ்டாலின் செயல் தலைவராக நியமிக்கப்பட்டார். தற்போது தலைவர் மு.க.ஸ்டாலின் முழுமையாக கட்சி மற்றும் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் நிலையில், செயல் தலைவர் பதவியை மீண்டும் உருவாக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கட்சிக்குள் கருத்து நிலவுவதாக கூறப்படுகிறது.
அதேநேரத்தில் தேர்தல் தோல்விக்கான கள ஆய்வு அறிக்கைகளில் பல மாவட்டச் செயலாளர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.சில மாவட்டங்களில் கட்சி நிர்வாகிகள் ஒற்றுமையாக செயல்படவில்லை என்றும், மக்களுடன் தொடர்பு குறைந்திருந்ததாகவும் அறிக்கைகளில் கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் மாவட்டச் செயலாளர் பதவிகளில் மாற்றங்கள் ஏற்படலாம் என்ற எதிர்பார்ப்பு கட்சிக்குள் நிலவுகிறது.
மேலும், தற்போது உள்ள மாவட்டங்களின் எண்ணிக்கையை அதிகரித்து புதிய மாவட்டச் செயலாளர் பொறுப்புகள் உருவாக்கப்படலாம் என்றும் பேசப்படுகிறது. எனினும், இந்த விவகாரங்கள் குறித்து இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. கள ஆய்வுக் குழுவின் அறிக்கைகளை முழுமையாக ஆய்வு செய்த பிறகே மு.க.ஸ்டாலின் முக்கிய முடிவுகளை எடுப்பார் என திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதனால் திமுகவில் திடுக்கிடும் மாற்றங்கள் நிகழுமா அல்லது சில நிர்வாக மாற்றங்களோடு மட்டுமே முடிவுகள் எடுக்கப்படுமா? என்ற கேள்விக்கு வரும் வாரங்களிலோ , மாதங்களிலோ தான் பதில் கிடைக்கும் என்று அரசியல் பார்வையாளர்கள் அடிக்கடி கூறுகிறார்கள்
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *