ஜெலென்ஸ்கியுடனான சந்திப்பை நிராகரித்தார் புதின்!

அமைதி ஒப்பந்தத்தின் நிபந்தனைகள் ஏற்றுக்கொள்ளப்படும் வரை ஜெலென்ஸ்கியை சந்திப்பதில் எந்தப் பயனும் இல்லை என ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் நடைபெற்ற ஒரு பொருளாதார கருத்தரங்கில் ரஷ்யா அதிபர் புதின் கலந்து கொண்டு பேசினார். அப்போது,  அமைதி ஒப்பந்தத்தின் நிபந்தனைகள் ஏற்றுக்கொள்ளப்படும் வரை ஜெலென்ஸ்கியை சந்திப்பதில் எந்தப் பயனும் இல்லை என்று கூறினார். போர் இலக்குகள் முழுமையாக அடையப்படும் வரை ரஷ்யாவின் தாக்குதல் தொடரும் என்று தெரிவித்தார்.

அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் நடந்த அமைதி பேச்சுவார்த்தைகள், இரு தரப்பினரையும் ஒரு உடன்பாட்டிற்கு நெருக்கமாக கொண்டுவரத் தவறிவிட்டதாகக் கூறினார். போரை முடிவுக்கு கொண்டுவர உக்ரைன் அதிபர் கூறிவரும் நிலையில், உக்ரைன் தரப்பு நமது ஆயுத படைகளின் முன்னேற்றத்தை தடுப்பது மட்டுமே அர்த்தமுள்ளதாக இருக்கும் என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *