மாசுபாட்டைக் குறைக்க தில்லி அரசின் புதிய திட்டம் – மின்சார டாக்சிகள் அறிமுகம்!

Advertisements

தில்லியில் ஆயிரம் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மன்ஜீந்தர் சிங் சிர்சா மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் பங்கஜ் குமார் சிங் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

தில்லியில் கடும் மாசுபாட்டால் பொதுமக்கள் தினமும் சுவாச கோளாறு உள்ளிட்ட பாதிப்புகளை எதிர்கொண்டு வருகின்றனர். இதன் காரணமாக, அம்மாநில அரசு மின்சார வாகன பயன்பாட்டை ஊக்குவித்து வருகிறது.

இதனை தொடர்ந்து, தில்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மன்ஜீந்தர் சிங் சிர்சா மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் பங்கஜ் குமார் சிங் ஆகியோர் ஆயிரம் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை கொடியசைத்து தொடங்கி வைத்தனர். பசுமை எரிசக்தியை ஊக்குவிக்கும் வகையில், மின்சார டாக்சி சேவையானது தில்லி செயலகத்தில் இருந்து தொடங்கியது.

இதனுடன் கிரீன் எஸ்.எம்.செயலி ஒன்றும் தொடங்கப்பட்டுள்ளது. இதனை மக்கள் பயன்படுத்தி பயன் பெறலாம் என்று தெரிவித்துள்ளது. ஓராண்டுக்குள் இந்த எண்ணிக்கையை 10 ஆயிரம் மின்சார வாகனங்களாக அதிகரிக்க தில்லி அரசு திட்டமிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *