நீட் மசோதாவை சட்டமாக்கியவர் ஸ்டாலின்.. போராட்டத்தில் கனிமொழி புகழாரம்..!

திராவிட முன்னேற்றக்கழகத்தின் ஆட்சி காலத்தில் முதலமைச்சராக இருந்த மு. க. ஸ்டாலின், சட்டமன்றத்தில் நீட் தேர்விற்கு எதிராக, மசோதாவை அமைத்து அதனை சட்டமாக்கவும், உத்தரவு வழங்கினார் என்று சென்னை பல்லவன் இல்லத்தில் நடைபெற்ற மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு அளித்த நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்தார்.

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி, சென்னை பாலன் இல்லத்தில் நடைபெற்று வரும் மாணவர்களின் தொடர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கலந்து கொண்டு, நீட் தேர்வால் மாணவர்கள் எதிர்கொள்ளும் பாதிப்புகள், மாநில உரிமை, சமூகநீதி மற்றும் கல்வி சமத்துவம் குறித்த கருத்துகளைப் மாணவர்களிடையே எடுத்துரைத்தார்.

அதனைத் தொடர்ந்து, நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, தமிழ்நாடு தொடர்ந்து நீட் தேர்வு ஒழிக்கப்பட வேண்டும், நீட் தேர்வு அகற்றப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டைத்தான் எப்போதும் எடுத்துள்ளது என்றும், திராவிட முன்னேற்றக்கழகத்தின் ஆட்சி காலத்தில் முதலமைச்சராக இருந்த மு. க. ஸ்டாலின், சட்டமன்றத்தில் நீட் தேர்விற்கு எதிராக, மசோதாவை அமைத்து அதனை சட்டமாக்கவும், உத்தரவு வழங்கினார்.

ஆனால் அந்த மசோதாவினை ஆளுநர் பெற மறுத்தது, இன்று வரை நிலுவையில் உள்ளது என்றும், இதை எதிர்த்து திராவிட முன்னேற்றக் கழகம், உச்ச நீதிமன்றத்தை நாடி உள்ள நிலையில், நீட் தேர்விற்கு, எதிராக நாடு முழுவதும் மாணவர்கள் போராடி வருகின்றனர் எனவும், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *