மத்திய அரசின் வி.பி.ஜி. ராம்ஜி திட்டத்தின் கீழ், சுமார் 15 லட்சம் மதிப்பீட்டில், காந்தபாளையம் கிராமத்தில் புதிய குளம் வெட்டும் பணியினை, அதி.மு.க.சட்டமன்ற கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி துவக்கி வைத்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் வட்டம் காந்தபாளையம் கிராமத்தில், மத்திய அரசின் வி.பி.ஜி. ராம்ஜி திட்டத்தின் கீழ், சுமார் 15 லட்சம் மதிப்பீட்டில் புதிய குளம் வெட்டும் பணியினை, கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினரும், அதிமுகவின் சட்டமன்ற கொறடாவுமான அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார்.
அப்போது. பூமி பூஜைக்காக ஏற்றப்பட்ட கற்பூரத்தின் தீ. அக்ரி.எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தியின் வேட்டியில் பற்றியது. உடனே அருகிலிருந்தவர்கள் தீயை அனைத்தனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
அதன் பின்னர், சட்டமன்ற உறுப்பினர் அக்ரி-கிருஷ்ணமூர்த்தி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கிவிட்டு, அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.



