
அதிமுக போன்ற பெரிய இயக்கத்துடன் சேர்ந்து MP பதவி வாங்கிவிடுவேன் என்று சில ஊடகங்களுக்குப் பொறாமையாக உள்ளது என்றும் அதனால் என்னைப் பற்றிக் கீழ்த்தரமாகப் பேசுகிறா ர்கள் என நடிகர் மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்.
நடிகர் மற்றும் இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் நிறுவனர் மன்சூர் அலிகான் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசியே அவர். பல கற்பழிப்பு பொய் வழக்குகளின் பேரில் என்மேல் பல வழக்குகள் பதியப்பட்டது, ஆனால் அப்போது எந்த வித செய்தியும் என்னைப் பற்றி வரவில்லை…
நான் என் சொந்த உழைப்பின் மூலமாகத் தான் இவ்வளவு தூரம் வந்திருக்கிறேன்…என்னிடம் கடன் வாங்கியவர்கள் தயவுசெய்து எங்கிருந்தாலும் என்னிடம் கொடுத்துவிடுங்கள்.
அதிமுக உள்ளிட்ட சில கட்சிகள் என்னோடு கூட்டணிக்குப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். அதிமுக என்ற பெரிய இயக்கத்தின் மூலமாக எனக்கொரு MP பதவி கிடைத்து விடும் என்று பொறாமை.
திமுக, அதிமுக நாங்கள் எல்லாம் பங்காளி சண்டைகள் போட்டுக் கொள்வோம்…அதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்.
ஆனாலும் அவர்கள் தரும் வாய்ப்புக்காக நான் காத்திருக்கவில்லை. வேலூர் தொகுதியில் போட்டியிடுவதற்கான வேலைகளை இன்றே தொடங்க இருக்கிறேன்.
ஜெயலலிதா திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டார். அதனால் தான் ஜிஎஸ்டி நீட் தேர்வு உள்ளிட்ட பல நாசகரமான வேலைகள் தமிழ்நாட்டிற்குள் ஊடுருவின. என்னை யாரும் தகுதி இல்லாதவன் என்று குறைத்து மதிப்பிட வேண்டாம்.
பெண்களுக்கு மகளிர் உரிமை தொகை வழங்குவது பிச்சை இடுவதற்கு சமம் என்ற குஷ்பூ கூறியிருப்பது தவறானது கண்டிக்கத்தக்கது.கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சைப் புகினும் கற்கை நன்றே.முடிந்தால் குஷ்பூ பத்தாயிரம் ரூபாய் கொடுக்க வேண்டியது தானே அதை விட்டுவிட்டு இப்படி பேசுவது தவறானது.
மீண்டும் மோடி ஆட்சியமைக்க தமிழகத்தில் காலூன்ற நான் விடமாட்டேன்;அதற்கான ஆயுதத்தைக் கையில் எடுப்பேன்.
அண்ணா பெரியார் போன்றோரின் பெயரைச் சொல்லி ஆட்சியில் இருப்போர், அவர்களைப் போன்று எளிமையாக இருக்கிறார்களா.
போதைப்பொருள் அனைத்தும் குஜராத் துறைமுகத்திலிருந்து வருகிறது. யாருடைய துறைமுகம் அது அவர்கள் தங்களுக்கு கமிஷன் வந்தால் போதும் என்று நினைக்கிறார்கள்.போதை பொருள் விற்பவர்களின் தலையை வெட்டினால் அந்தத் தவறை யாரும் செய்யமாட்டார்கள்.
படிப்பகங்ககளை அதிகமாக்கி, குடிப்பகங்களை குறைக்க வேண்டும்.தமிழ்நாட்டில் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். போதைப்பொருள் கடத்துபவர்களை சுட்டுக் கொல்ல வேண்டும் அப்போதுதான் போதைப்பொருட்கள் நடமாட்டம் குறையும். என் வீட்டுக்கு ED ரெய்டு வந்தாலும் எனக்குப் பயமில்லை.
கிளியை வளர்த்து வேறு கையில் கொடுத்து விட்டீர்களே நாட்டாமை என்று சரத்குமாரை கலாய்த்தார் மன்சூர் அலிகான்.

