பிரகலாத் ஜோஷி புதிய கல்வி அமைச்சராக இன்று பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.!

ராஜினாமாவுக்கான காரணம்: நீட் தேர்வு (NEET-UG) வினாத்தாள் கசிவு விவகாரம் மற்றும் அதைத் தொடர்ந்து நாடு முழுவதும் நீடித்த மாணவர்களின் தொடர் போராட்டங்களை அடுத்து, தர்மேந்திர பிரதான் தன் பதவியை ராஜினாமா செய்தார். அவரது ராஜினாவை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஏற்றுக்கொண்டார்.

பிரகலாத் ஜோஷியின் பொறுப்புகள்: பிரதமர் நரேந்திர மோடியின் பரிந்துரையின் பேரில், குடியரசுத் தலைவர் பிரகலாத் ஜோஷிக்கு கல்வித்துறையின் கூடுதல் பொறுப்பை வழங்கி உத்தரவிட்டுள்ளார். இவர் ஏற்கனவே நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத்துறை மற்றும் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை அமைச்சராகப் பதவி வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.

அரசியல் பின்னணி: கர்நாடக மாநிலம் தார்வாட் தொகுதியின் மக்களவை உறுப்பினரான பிரகலாத் ஜோஷி, பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவராவார். இவர் ஏற்கனவே நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சராகவும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *