Advertisements

பஹ்ரைனில் உள்ள அமெரிக்காவின் அமேசான் நிறுவன கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தி உள்ளதாக ஈரான் புரட்சிகர காவல்படையினர் அறிவித்துள்ளனர்.
வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க கட்டமைப்புகளைக் குறிவைத்து ஈரான் ராணுவப் படைகள் தொடர்ந்துத் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. அந்த வகையில், பஹ்ரைனில் உள்ள அமேசான் நிறுவனத்தின் தரவுகள் மையம் மீது ஈரானின் புரட்சிக் கர காவல்படை தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்தத் தாக்குதல் குறித்து, ஈரானிய புரட்சிகர காவல்படையினர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், குழந்தைகளைக் கொல்லும் அமெரிக்க ராணுவத்திற்கு உளவுத்துறை தகவல்களை வழங்குவதில் ஆதரவு தந்து, முக்கிய பங்காற்றும் அந்நாட்டு நிறுவனமான அமேசானின் கட்டமைப்பு மீது தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
Advertisements




