Vishal: தமிழக அரசுக்கு விஷால் கேள்வி!

Advertisements

மழைநீர் வடிகாலுக்காக செய்யப்பட்ட ஏற்பாடு என்னவாயிற்று?அதிகமான பாதிப்புக்கு என்ன காரணம் ? என்று நடிகர் விஷால் கேள்வி எழுப்பி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சென்னையில் மிக்ஜாம் புயல் காரணமாக பலத்த சேதமடைந்துள்ளது. மக்கள் அதிக அவதிக்குள்ளாகினர். பால் தட்டுப்பாடு, மின்விநியோக தடை, போக்குவர்த்து தடை, வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தும் சாலைகளில் நீர் சூழ்ந்தும் உள்ளதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

சென்னையில் நிலைகுறித்து நடிகர் விஷால் அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளார். இயற்கை பேரிடர் காலங்களில் மக்கள் பிரதிநிதிகள் களத்தில் இறங்கி  செயல்பட்டு மக்களுக்கு உதவி செய்ய வேண்டும். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள தனது X  தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தான் ஒரு நடிகனாக இல்லாமல் ஒரு வாக்களானாக  இந்த கோரிக்கையை முன் வைப்பதாக தெரிவித்துள்ளார்.

மழைக்கு முன்பே சரி செய்ய வேண்டிய வடிகால் சீரமைப்பு என்னவானது. ஏன் செய்யவில்லை? சரியாக செய்யாததால் தான் இவ்வளவு பாதிப்பு. தற்போதைய அரசு முன்னெடுப்பு நடவடிக்கைகளை ஏன் முழுவதுமாக செய்யவில்லை என்று கேட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *