யார் இந்த கிறிஸ்துமஸ் தாத்தா..எப்படி இந்த பெயர் வந்தது தெரியுமா..?

Advertisements

கிறிஸ்துமஸ் என்றாலே நம் நினைவுக்கு வருவது இவர்தான் குண்டான தோற்றம் புசுபுசு என்று இருக்கும் வெண்மையான தாடி, மீசை, சிவப்பு வெல்வெட் உடை, கோமாலி அனிவது போன்ற ஒரு குல்லா, முதுகில் ஒரு நீண்ட பை அதிலே நிறைய இனிப்பும் பரிசுப்பொருட்களும் வைத்துக்கொண்டு காட்சி தருபவர்.

ரெய்ண்டீர் என்ற மான்கள் பூட்டிய அவரது வாகனம். அவர் யார் என்று நம் அனைவருக்குமே தெரியும், அவர்தான் கிறிஸ்துமஸ் தாத்தா அதாவது santa claus, யார் இந்த கிறிஸ்துமஸ் தாத்தா இவர் ஒரு கற்பனை கதாபாத்திரமா இல்லை உண்மையான நபரா என்பது பலபேருடைய கேள்வியாக இருக்கு.கிறிஸ்துமஸ் தாத்தா எப்படி உருவானார், இவருடைய வரலாறு என்ன உண்மையான கிறிஸ்துமஸ் தாத்தா யார் என்பதை சுவாரஸ்யமான தகவலாக தற்பொழுது பார்க்கலாம்

முன்பெல்லாம் மேற்கத்திய நாடுகளிலும் கீழை நாடுகள்ல மட்டுமே காணப்பட்ட கிறிஸ்துமஸ் தாத்தா இன்று உலகெங்கும் பரவி அவருக்கே உரித்தான சிவப்பு நிற உடையில வெண்தாடி, கண்ணாடியுடன் வலம் வரத் தொடங்கிவிட்டார், சாண்ட்டா என்றும் சாண்ட்ட கிளாஸ் என்றும் குழந்தைகள் அன்போடு அழைத்து மகிழ்ந்து கொண்டாடுவதை நாம் பார்க்கிறோம்.

உலகில் எந்த கிறிஸ்தவக் குழந்தையிடமும் சாண்ட்டா கிளாஸ் என்றால் அறியாத குழந்தைகளே இல்லை அவ்வளவு பிரபலமாக இருக்கும் உண்மையான கிறிஸ்துமஸ் தாத்தா யார் தெரியுமா 3ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புனித நிக்கோலஸ் என்பவர்தான் ஆம் இவர்தான் உண்மையான கிறிஸ்துமஸ் தாத்தா பதாரியா பகுதியில் லைசியா என்னும் இடத்தில் பிறந்தார் இந்த நிக்கலஸ் இவர் கத்தோலிக்க பிஷப்பாக பணி செய்து வந்தார்.

இவர் அடித்தள மக்களின் மேம்பாட்டிற்காகவும், ஒடுக்கப்பட்ட சமுதாயத்திற்காகவும் தன்னை அற்பணித்துகொண்ட அற்புதர் அவர், உன் வலக்கரம் செய்தது இடக்கரம் அறியக்கூடாது என்ற வேத வசனத்திற்கு ஏற்ப வாழ்ந்து மக்களின் தேவை அறிந்து அதனை அவர்கள் அறியாமல் நிறைவேற்றி வந்தார்.இறக்கம், அன்பு, தாராள மனம், குழந்தைகளிடம் அன்பு காட்டுதல் போன்ற நல்ல குணங்களையுடைய இந்த நிக்கலஸ் சிவப்பு அங்கி அனிந்து வெள்ளை குதிரையில் சென்று குழந்தைகளுக்கு பரிசுகளை கொடுத்து மகிழ்ந்து வந்தார்.

அதுமட்டுமா தன் சொத்துக்கள் அனைத்தையும் விற்று ஏழைகளுக்கும், வியாதியுற்றவர்களுக்கும் உதவிசெய்தார் என்பது குறிப்பிடதக்கது.ஆலயத்தில் தங்கள் தனிப்பட்ட வேண்டுதல்களை சொல்லலாம் என்றும், அவர்களின் குறைகள் நீங்க விசேஷமாக பிரார்திக்கப்படும் என்றும் நிக்கலஸ் அறிவித்திருந்தார் அதன்படி மக்கள் தங்கள் குறைகளை சொல்லும்போது அது நியாயமானதா? என்று அறிந்துகொண்டு அவர்களுக்கு தெரியாமல் அவர்கள் அறியாமலேயே அந்த உதவிகள் அவர்களுக்கு கிடைக்குமாறு செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

ஒருமுறை ஒரு மனிதர் என்னுடைய 3 பெண் பிள்ளைய நான் எப்படி கரை சேர்க்கப்போறேனு தெரியலயே என்று புலம்பி தவித்து வந்தார். தனது மூத்த மகளுக்கு திருமண நிச்சயமானபின்பு நகைகள் செய்யவோ, ஆடை ஆபரணங்கள் வாங்கவோ வழியின்றி மிகுந்த துயருக்கு ஆளாகி வேதனைபட்டு அழுது மன்றாடினார். குளிர்கால விழா எங்கும் கோலகலமாக கொண்டாடப்பட்டுக் கொண்டிருந்த அந்த வேளையில் இந்த மனிதன் மட்டும் மனம் சோர்ந்துபோய் மகிழ்ச்சியுமின்றி இருந்தார்.

அந்த சோகத்திலேயே அவரும் அவர் குடும்பமும் பண்டிகை கொண்டாடாமல் இருந்தனர் நள்ளிரவு வேலையில் ஏதோ ஒரு பொருள் “பொத்” தென்று விழுந்த சத்தம் கேட்டு அந்த மனிதர் எழுந்து பார்த்தார். வீட்டின் புகைபோக்கிக்கு அருகில் நேர் கீழாக ஒரு பை விழுந்து கிடந்தது அந்தப் பையைத் திறந்து பார்த்த அவருக்கோ மிகுந்த ஆச்சரியம்! தங்க ஆபரணங்களும், பணமும் இருந்ததை கண்டு அவர் திகைத்துப் போனார்.

“கொடுக்கின்ற தெய்வம் கூரையைப் பிச்சுக்கிட்டு கொடுக்கும்” என்று சொல்வது போல தெய்வம் என் தேவையை சந்தித்து விட்டார் என்று சொல்லி தன் மகளின் திருமணத்தை தடபுடலாக நடத்தினார்.அதே போல தனது இரண்டாவது மகளுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது வழக்கம்போல அவரிடம் ஒன்றும் இல்லை குளிர்கால பண்டிகை வாரத்தில் முன்பு போல இந்த முறையும் ஒரு பை வந்து விழுந்தது உடனே அவர் வீட்டிற்கு வெளியே ஓடி சென்று பார்த்தார் தூரத்தில் யாரோ செல்வது மட்டும் தெரிந்தது.

ஆனால் உருவம் யார்? என்பது அறிந்துகொள்ளமுடியவில்லை சில காலம் சென்றபின்பு தனது மூன்றாவது மகளுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது, இந்த முறை குளிர்கால பண்டிகை வாரத்தின்போது விழித்திருந்து அந்த அறியா நார் யார்? என்பதை கண்டிப்பா கண்டுபிடிச்சே ஆகணும் என்ற அவரின் வரவுக்காக காத்திருக்க ஆரம்பித்தார்.

எதிர்பார்த்தப்படியே ஒரு பை பொத்தென்று விழுந்ததும் கதவை திறந்து ஓடி போய் பார்த்தார் சிவப்பு அங்கி அணிந்த ஒரு உருவம் வெள்ளை குதிரையில் ஒரு பெரிய பையுடன் சென்றுகொண்டிருந்தார் அவரை மடக்கி பிடித்து அவர் யார் என்று பார்தால் அந்த உருவத்தின் சொந்தகாரர் இந்த நிக்கலஸ் இந்த மனிதனின் கண்கள் ஆச்சரியத்தால் நிறைந்திருந்தது அய்யா நீங்கலா? நீங்களா அய்யா என் 3 மகளுக்கும் இப்படி உதவி செஞ்சிங்க என்று கண்களில் அவருக்கு கண்ணீர் ஆனால் நிக்கலஸ் அவரை பார்த்து அவருக்கு உதவியதை யாரிடமும்சொல்லவேண்டாம் என்று கேட்டுகொண்டு அவரை ஆசிர்வதித்து சென்றுவிட்டார்.

இந்த நிக்கலஸ் எப்போதும் குளிர்கால பண்டிகையின் வாரத்தில் தேவை உள்ளவர்கள் யார் என்று அறிந்து வீட்டின் புகைபோக்கி வழியாக பொன்னோ பொருளோ போடுவதை வழக்கமாக கொண்டிந்தார். அதைபோட்டுவிட்டு அந்த வீட்டார் கவனிப்தற்குள் தனது வெள்ளை குதிரையில் பறந்துவிடுவார். பின்னர் அந்த குடும்பத்தினரும் அந்த குழந்தைகளும் அதை அனுபவித்து மகிழ்வதை கண்டு இந்த நிக்கலஸ் மகிழ்வார்.

இப்படி தனது சொத்துக்களை எல்லாம் விற்று மக்களை தேடி தேடி சென்று உதவி செய்யத நிக்கலஸ் 3ஆம் நூற்றாண்டில் டிச.6ஆம் நாள் உயித்துறந்தார் இந்த நாள் பண்டிகை நாளாக ஐரோப்பாவில் இன்றும் கொண்டாடப்படுகிறது என்பது குறிப்பிடதக்கது.இந்த புனித நிக்கலஸ் இறந்த பின்னர் அவரது சடலம் மயிரா என்கிற இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது மக்களிடம் அவர் காட்டிய கருணை அன்பு மற்றும் அவரது தாராள குணம் காரணமாகவும் அவரது கல்லறைக்கு மக்கள் கூட்டம் கூட்டமாக வரத் தொடங்கினர் .

6ஆம் நூற்றாண்டிற்குள் மக்களிடம் அவரது கல்லறை மிகவும் பிரபலமாகிவிட்டது.அதன் பின்னர் 18ஆவது நூற்றாண்டின் இறுதியில் டச்சு பிரிவினர் பலர் அமெரிக்க நியூயார்க்கில் குடியேறினர். டிசம்பர் 6ஆம் தேதி நிக்கலஸ்சின் இறந்த நாளை கொண்டாடியும் வந்தனர் சிண்ட்டிநிக்கலஸ் என்னும் சிண்டர்கிலாஸ் பற்றி டச் பிரிவினர் அமெரிக்காவில் அறிமுகப்படுத்தினர்.அவர் போலவே சிவப்பு அங்கி அணிந்து வெள்ளை குதிரையில் டிசம்பர் 6ஆம் தேதி வீடு வீடாக சென்று குழந்தைகளுக்கு பரிசுகளையும் அளித்து மகிழ்ந்தனர் .

அதைப்பற்றி அமெரிக்கன் பிரஸ் வெளியீட்டில் எஸ்டிஏ கிளாஸ் என்று அச்சடிக்கப்பட்டது.  காலப்போக்கில் எஸ் டி ஏ கிளாஸ் என்பது சாண்டா கிளாஸ் என்றும் அவரது ஆடைகள் சில மாற்றங்களுடன் தற்பொழுதிருக்கும் இருக்கும் கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் போல மாறிவிட்டது. நிக்கலஸ் தனது வாழ்கையில் செய்த வழக்கம் தற்பொழுது ஒரு பழக்கமாக மாறிவிட்டது. பல நபர்கள் சாண்ட்டா வேடம் அணிந்து
தன் அருகில் உள்ள தேவையுள்ளவர்களுக்கு உதவி செய்ய ஆரம்பித்தனர். குழந்தைகளுக்கு பரிசையும் அளித்து மகிழ்ந்தனர்.

இங்கிலாந்தின் குழந்தைகள் டிச.6ஆம் தேதி ஆனதும் ஸ்டாக்கின்களை தொங்கவிட்டிருப்பார்களாம் சாண்டா புகைப்போக்கி வழியாக இறங்கி வந்து பரிசுப்பொருட்களை போட்டுவிட்டு போவர் என்பது இங்கிலாந்து குழந்தைகளின் நம்பிக்கை. ஜப்பானிய குழந்தை ஹோட்டியோஷோ என்றழைப்பாளர்களாம், ஹாலந்து தேசத்தின் குழந்தைகள் சாண்ட்டாவை இழுத்துவரும் ரெய்ண்டீர் கலைமானுக்கு உணவாக கேரட்டுகளைபும் வைக்கோலையும் வைத்து வரவேற்றனர், டென்மார்க் குழந்தைகள் தங்களுக்கு பரிசு தரும் சாண்ட்டா தாத்தாவிற்கு பாலும், அரிசி சாதமும் கொடுப்பார்களாம்.

சிரியா நாட்டில் சாண்டாகிலாஸ் ஒட்டகத்தில் வருவார் என்று குழந்தைகள் நம்புகின்றனர் இயேசுவை ஒட்டகத்தில் காணவந்த சாஸ்திரிகள் இந்த சாண்ட்ட கிலாஸ்தான் என்று சொல்லுகின்றனர் ஆஹா குழந்தைகளுக்கு கிறிஸ்த்துமஸ் தாத்தாமீது எவ்வளவு பிரியம் பார்தீர்களா. 1809 ஆம் ஆண்டில் புகழ்பெற்ற எழுத்தாளர் வாஷிங்டன் இர்விங் என்பவர் நிக்கலஸ் தான் ஒரிஜினல் santa class என்பதை பல்வேறு ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டினார் .

1931 ஆம் ஆண்டு கொக்ககோலா நிறுவனம் சாண்டா கிளாஸ் பற்றி தொடர் விளம்பரங்களில் படக்கதை போல வெளியிட்டது 1934 ஆம் ஆண்டு வெளிவந்த சாண்டா கிளாஸ் ஈஸ் கம்மிங் டு டவுன் என்கிற பாடல் மிகவும் பிரபலமாகி என்றும் காலத்தால் அழியாததாக இருக்கின்றது. இப்போது உலகம் எங்கும் டிசம்பர் மாதத்தில் ஏராளமான கிறிஸ்துமஸ் தாத்தாக்கள் உலா வந்து சாண்ட்டா கிலாஸ் வேடமிட்டு நற்செய்தியை அறிவிக்கின்றனர், இந்தியாவில் ஜிங்கிள் பெல்ஸ் என்ற பாடல் பாடியவாறு கிறிஸ்மஸ் தாத்தா வேடமனிந்து வீடு வீடாக பரிசு பொருட்கள் வழங்குவது ஒரு வழக்கமாக மாறியது.

இந்த கிறிஸ்துமஸ் தாத்தா இல்லாமல் இன்று எங்கும் கிறிஸ்துமஸ் கொண்டாடப்படுவதில்லை என்கிற அளவிற்கு கிறிஸ்மஸ் தாத்தாவும் கிறிஸ்த்துமஸ்சும் ஒன்றினைந்து விட்டது இந்த நிக்கலஸ் செய்துவந்த இந்த முயற்சி இன்று உலக அலவில் பிரபலமாகி கிறிஸ்துமஸ் வாரங்களில் தேவை உள்ளவர்களுக்கு உதவும் பழக்கம் ஒரு வழக்கமாகவே மாறிவிட்டது என்று சொல்லலாம்.
நாமும் இதுபோன்று கிறிஸ்த்துமஸ் பண்டிகை நாளில் பிறருக்கு உதவ முயற்சி செய்வோம் இந்த கிறிஸ்துமஸ் பண்டிகையில் கிறிஸ்துவின் பிறப்பை கொண்டாடுவது மட்டும் இல்லாம ஆண்டவர் ஆகிய இயேசுவின் அன்பை வெளிப்படுத்தும் விதமாக நம்மால் முடிந்தவற்றைக் கொண்டு தேவை உள்ள மக்களுக்கு உதவி செய்வோம். இதுதான் கிறிஸ்துமஸ் தாத்தா எப்படி உருவானார் என்பதன் வரலாறு.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *