பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தினால் கடும் பதிலடி..!

இந்தியா ஆக்கிரமிப்பு செய்தால் பாகிஸ்தான் கடுமையான பதிலடி கொடுக்கும் என்று பாகிஸ்தானின் முப்படைத் தலைவர் அசிம் முனீர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு பாகிஸ்தானில் முப்படைக்களின் தலைவர் பதவியை அந்நாட்டு அரசாங்கம் புதிதாக உருவாக்கியது. இதனை தொடர்ந்து, முப்படைகளின் தலைவராக ராணுவ தளபதியாக இருந்த பீல்டு மார்ஷ் அசிம் முனீர் நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் முப்படைகளின் தலைவராக பதவியேற்ற பிறகு அசிம் முனீர் இஸ்லாமாபாத்தில் உள்ள ராணுவ தலைமையகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசியபோது, மாறிவரும் அச்சுறுத்தல்களைக் கருத்தில் கொண்டு, முப்படைகளை மேம்படுத்துவது அவசியம் என்று கூறினார். இதை தொடர்ந்து, எதிர்காலத்தில் இந்தியா ஆக்கிரமிப்பு செய்தால் பாகிஸ்தான் கடுமையான பதிலடி கொடுக்கும் என்றார்.

இதையடுத்து, இந்தியாவுக்கு எதிராக எச்சரிக்கை விடுத்ததுடன், ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான் அரசுக்கும் தடை செய்யப்பட்ட தெஹ்ரீக் இ தலிபான் பாகிஸ்தான் பயங்கரவாத குழுவுக்கும் முடிவு கட்ட வேண்டும் என எச்சரிக்கை விடுத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *