Chennai International Film Festival: சிறந்த நடிகர் வடிவேலு!

Advertisements

சென்னை சர்வதேச விருதுகள் வழங்கப்பட்ட நிலையில்  சிறந்த படம் அயோத்தி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. 21-ஆவது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் பிரபலங்கள், திரைப்படங்கள் பரிசுகள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

21 வது சென்னை சர்வதேச திரைப்பட விழா, இந்த மாதம் டிசம்பர் 14-ஆம் தேதி துவங்கிய நிலையில் இன்று முடிவடைந்தது. மொத்தம் 57 நாடுகளின் 126 திரைப்படங்கள் திரையிடப்பட்டன. சென்னை திரைப்பட விழாவில் கலந்து கொள்ள 25 தமிழ் படங்கள் அனுப்பப்பட்ட நிலையில், அதில் இருந்து 12 படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

தற்போது திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், வெற்றி  பெற்றவர்கள் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. சிறந்த தமிழ் படமாக இயக்குனர் மந்திரமூர்த்தி இயக்கத்தில், ஆர்.ரவீந்திரன் தயாரிப்பில் வெளியான ‘அயோத்தி’ திரைப்படம் தேர்வு செய்யப்பட்டது. இப்படத்தின் இயக்குனர் மந்திரமூர்த்தி மற்றும் தயாரிப்பாளருக்கு தலா ஒரு லட்சம் பரிசாக வழங்கப்பட்டது.

இரண்டாவது சிறந்த தமிழ் திரைப்படமாக இயக்குனர் கார்த்திக் சீனிவாசன் இயக்கத்தில், கே வெள்ளதுரை தயாரிப்பில் வெளியான ‘உடன்பால்’ திரைப்படம் தேர்வு செய்யப்பட்டது.  இப்படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளருக்கு தலா 50,000 பரிசாக வழங்கப்பட்டது.

சிறந்த நடிகருக்கான விருது, மாமன்னன் படத்தில் நடித்த வைகைப்புயல் வடிவேலுவுக்கு வழங்கப்பட்டது. சிறந்த நடிகைக்கான விருது ‘அயோத்தி’ படத்தில் நடித்த ப்ரீத்தி அஸ்ரானிக்கு வழங்கப்பட்டது. இவர்கள் இருவருக்கும் தலா 50,000 பரிசாக வழங்கப்பட்டது.

சிறந்த ஒளிப்பதிவாளருக்கான  விருது ‘போர் தொழில்’ படத்தில் பணியாற்றிய கலைச்செல்வன் சிவாஜிக்கு வழங்கப்பட்டது.  சிறந்த பட தொகுப்பாளருக்கான விருது, ‘போர் தொழில்’ படத்தில் பணியாற்றிய ஸ்ரீஜித் சாரங் என்பவருக்கு வழங்கப்பட்டது. அதே போல் சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருது, ‘மாமன்னன்’ படத்தில் பணியாற்றிய சுரேந்திரன் ஜி என்பவருக்கு வழங்கப்பட்ட நிலையில், அனைவருக்கும் விருதுகளும் பரிசுத் தொகை 50,000 வழங்கப்பட்டது.

சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருது ‘செம்பி’ படத்தில் நடித்த நிலாவுக்கு வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தமிழ்நாடு அரசு எம் ஜி ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவன மாணவர்கள் இயக்கிய குறும்படத்தில், சிறந்த குறும்படமாக ‘லாஸ்ட் ஹாட்ஸ்’ என்கிற படம் தேர்வு செய்யப்பட்டு அதை இயக்கிய பகவத் என்கிற மாணவருக்கு பத்தாயிரம் பரிசாக வழங்கப்பட்டது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *